பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

சமுத்திரக் கதைகள்


கண்களை எடுத்தவர் “அடடே மாடசாமியா... நான் வேற யாரோன்னு நினைச்சேன்... நான் செத்த நேரத்துல படிச்சுட்டுத் தாரேன்... அப்புறமா நீ படி” என்று இழுத்துக் கூறிவிட்டு, பத்திரிகையை இரண்டாக மடித்து, மாடசாமி படிக்க முடியாது என்று நிச்சயப்படுத்திக் கொண்டு, அவர்பாட்டுக்குப் படித்துக் கொண்டிருந்தார். இது, மாடசாமியின் ஆர்வத்தை, ஜாக்கி, குதிரையை வேகப்படுத்துவது போல், வேகப்படுத்தியது.

கடைக்காரர் படித்துக் கொண்டே இருந்தார். மாடசாமி, நினைத்திருந்தால் பத்து பாக்கெட் கடலை மிட்டாயையும், வேறு கடையில் போட்டுவிட்டு, சைக்கிள் கம்பியை நீட்டியிருக்கலாம். அவருக்கு அதில் மனமில்லை. எப்படியாவது கடைக்காரர் சுவாரஸ்யமாகப் படிக்கும் அந்த உலகச் செய்தியை படித்துவிட்டே நகர்வது என்று வீரசபதம் வேண்டி நின்றவர் போல், வேறெதையும் கொள்ளாமல் நின்றார்.

கடைக்காரர், குதிரைச் செய்தியைப் படித்து, கவர்ச்சி நடிகையின் கட்டழகைப் பருகி, சினிமா உலகில் வட்டமடித்து அரசியல் தலைவர்களின் ஆசாபாசங்களை ரசித்து “நான் ஏன் திருமணம் செய்யவில்லை?” என்ற ஒரு நடிகையின் ஆராய்ச்சிக் கட்டுரையை அலசி, கடைசியில் நடிகர் நாயகனுக்கு காலில் முள் குத்திவிட்டது... படப்பிடிப்பில் பரபரப்பு” என்ற செய்தியை அனுதாபத்துடன், அச்சச்சோ போட்டுக் கொண்டே வாசித்தார். அன்றுகாலை, தன் மகனை, கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே மயக்கம் வருமளவிற்கு அடித்து ரத்தத்தை வெளிப்படுத்திய வீர வரலாற்றை அடியோடு மறந்து, நடிகர் காலி ல் முள்பட்ட சங்கதியை கண்ணிரும் கம்பலையும் வருமளவிற்குப் படித்தார், பிறகு பிராணச் சிநேகிதனை பிரிய மனமில்லாமல் பிரிவதுபோல், பத்திரிகையை, மாடசாமியிடம் நீட்டினார்.

மாடசாமி, குதிரைச் செய்தியைப் படித்தார். அதிகமாகப் புரியவில்லை. இதரச் செய்திகளையும் பத்தே நிமிடத்தில் படித்து விட்டார். “நீங்க... ஒரு மணி நேரமா படிச்சிங்க... என்னால் அஞ்சி நிமிஷத்துக்குமேல் படிக்க முடியல’ என்று அவர்