பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாடசாமியின் ஊர்வலம்

171


மாடசாமி, மகளின் புடவைகளை அடகுவைத்து, கிண்டிக்குப் போகத் துவங்கினார். கடலைக் கம்பெனி, அவரை நீக்கிவிட்டது மட்டுமல்லாமல், அவர் ஆயிரத்து முந்நூறு பாக்கெட்டுகளுக்கு கணக்கு கொடுக்க வேண்டுமென்றும், சைக்கிளக் காணோம் என்றும், போலீஸுக்குப் போகப்போவதாகவும் மிரட்டியது.

துரைராசின், கண்கள் உள்நோக்கிப் போயின. கழுத்தெலும்புகள் துருத்தின. நெஞ்செலும்பு முன்னே வந்தது. கண்களுக்கு கீழே, கருமையான வட்டங்கள் விழுந்தன. அவனால் எழும்பக்கூட முடியவில்லை மனோ சபலத்தை தத்துவம் என்று சொல்லி எழுதும் ஒப்பாரிக் கவிஞர்களின் பாடல்கள் அவனுக்குப் பிடித்தன.

அவனுக்கு மட்டுமல்ல... அவன் அக்காள் சினியம்மைக்கும் தலை சுற்றியது. அதோடு வாந்தியும் வந்தது. (எதிர் LLIT657, இருப்பிடத்தை சொல்லாமல், கொள்ளாமல் மாற்றிக் கொண்டான்) அவள், இப்போது காதல் தோல்வி கதைகளை அழுதுகொண்டே படிக்கிறாள்.

மாடசாமிக்கு, கிண்டிக்குப்போக, பஸ்ஸுக்குக்கூட காசில்லை. ஒருநாள், முதன்முறையாக, வீட்டில் இருபத்து நாலு மணிநேரம் உட்கார்ந்தார். அப்போது, வீட்டுக்காரர் வந்து சாமான்களை வெளியே துக்கிப் போட்டார். வாடகைப் பாக்கி பத்துமாதத்தை தாண்டி விட்டதாம். சாமான்களைப் பொறுக்கிக் கொண்டு, அந்த குடும்பம் தெருவழியாக நடந்தபோது, கடலை மிட்டாய் கம்பெனிக்காரர், அவற்றைப் பறித்துக் கொண்டு போய்விட்டார்.

வயிற்றில் ஒரு பிள்ளையை வைத்துக் கொண்டிருந்த சினியம்மையை, ஒரு கையிலும், நடக்க முடியாமல் நடக்கும் துரைராசுவை ஒரு க்ையிலும் பிடித்துக் கொண்டு, மாடசாமி, சென்னை நகரின் பிரதான வீதி ஒன்றில் ஊர்வலம் போகிறார். அந்த வீதியின் இருமருங்கிலும் உள்ள கடைகளில், அந்த குடும்பத்தை நிலைக்கு கொண்டு வந்த அந்த மக்கள் பத்திரிகையும், பிரபல

• 13.

ச. 13.