பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

சமுத்திரக் கதைகள்


“ருசிப்பிக்கத்தாண்டி போறேன்... நீங்க கன்னின்னு கோழி அடிச்சு சேலை வச்சிக் கும்பிடுறியளே. உன் பெரிய மகள் நாகம்மா... அவள் ஆடு மேய்ச்சபோது, மாடு மேய்ச்ச மயில்சாமியோடு ஒரு இது வச்சிருந்தாளாம் என் புருஷன் சொல்லிட்டுத்தான் செத்தாரு...” “ஏழா... உன் வாயில் புத்து வரும்... அவள் சாகும்போது அவளுக்கு வயசு எட்டுழா நாயே...”

“எட்டு வயசுல காதல் வரக்கூடாதா...”

“அது ஒன் புத்தி... என் புள்ளையச் சொன்னவள் நாக்கு அவிஞ்சி போயிடும்...”

செல்லப்பாண்டி, தூக்கிப் பிடித்த கூட்டத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சக்கரையைப் பார்த்து ஒடப் போனான். சாட்டைக் கம்பை எடுப்பதற்காக அவன் அங்கும் இங்குமாய்த தலையைத் திருப்பியபோது, பலர் அவனை அமுக்கிப் பிடித்தார்கள். அம்மாக்காரி சினியம்மாவே இப்போது புத்திமதி சொன்னான்.

“எட்டு வயசுப் பச்ச மண்ணுக்கே குத்தம், குற சொல்லுற பைத்தியக்காரிக்கிட்ட என்னடா பேச்சு...? சந்திரனெப் பார்த்து நாய் கொலைச்சா கொலைக்கட்டும்... வாடா உள்ள...”

“ஆமாம்பா... ஆமாம். இன்னும் கொஞ்ச நேரத்துல மூணு மாசக் குழந்தை சிரிக்கதக் கூட இவ வேற விதமாக அர்த்தப்படுத்துவா. உள்ள போடா...”

செல்லப்பாண்டியை நான்கைந்து பேர் தள்ளிக் கொண்டு போய் வீட்டுக்குள் விட்டார்கள். அதே சமயம், அவர்கள் அவன் ‘மூக்கையும் முழியையும் ஆராய்ச்சி மாணவர்போல் ஆய்வு செய்தார்கள். அம்மாக்காரியும் தனது கற்பு, செத்துப்போன தன் மகள் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டதை நினைத்து பெருமையில்லை என்றாலும், சிறுமைப்படாமல் உள்ளே போனாள். உச்சக் கட்டத்தை எதிர்பார்த்த கூட்டம், உடைந்து போனது.