பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமர மேதை

69


“சரி... வேளாவேளைக்கு மருந்த பேப்பரில் மடித்து அதற்கு மேலக்ாலையும் மாலையுமுன்னு எழுதிடுறேன். மாற்றி சாப்பிடாம இருந்தா போதும். இந்த காகிதத்தில எழுதி இருக்கிறது சூட்கேஸ்க்கு நம்பர் பூட்டு... மூன்றுதடவ ஒன்பது... பூட்டை தலைகீழா கவிழ்த்து போட்டிங்கன்னா ஆறா ஆயிடும் ஜாக்கிரதையா திறங்க... நான் சொல்றது புரியுதா ?”

தாமோதரன் புரிகிறமாதிரி தலையை மேலும் கீழுமாகவும், புரியவில்லை என்பது போல் பக்கவாட்டிலும் ஆட்டிக் காட்டினான். அவளுக்குத்தான் புரியவில்லை. கூடவே ஒரு பயம். ஒரு வேளை மருந்து மாத்திரைகளை சாப்பிட மறந்துட்டா?

‘ஏங்க நானும் கூட வரட்டுமா?

‘அதான்... எங்க அண்ணா வாரானே... எங்கிட்ட சொன்னத அவன் கிட்டேயும் சொல்லு.

தமயந்தி, அதுவும் சரிதான் என்பது போல் வெளியே எட்டிப்பார்த்தவள், உங்களுக்கு துறு ஆயுசு என்று அத்தானை கண்களால் வரவேற்றபடியே, அறைக்குள் கொண்டு வந்தாள். அண்ணனை, தமோதரன் பிளாங்காக பார்த்தான். தலையை ஆட்டி குழப்பத்தை வெளிப்படுத்தினான். அந்த பார்வையின் பொருள் புரிந்தவராக உள்ளே வந்தவர் தன்னை அவனுக்கு அறிமுகம் செய்து கொண்டார்.

‘நான் உன் அண்ணன்டா ... கூட பொறந்த அண்ணன்டா...’

அண்ணனை அப்போது தான் அடையாளம் கண்டு கொண்டவன் போல், தமோதரன் பிசைந்த கைகளை விடுவித்துக் கொண்டபோது, தமயந்தி மூத்தாருக்கு ஆறுதல் ச்ொல்வது போல் பேசினாள்.

‘என்னயே இவருக்கு சிலசமயம் அடையாளம் தெரியாமல் போவுது. இப்படித்தான் ஒருநாள் மார்க்கெட்ல....’

மூத்தார் இடைமறித்தார்