பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

சமுத்திரக் கதைகள்


தன்னை நிறுத்தாமல், தன்னிடத்தில் அவளை நிறுத்தி சிந்தித்தபோது, உங்க தம்பி’ என்ற மைத்துனியின் சொல், அவருக்கு காதுகளில் கல்லெறியாய் விழுந்தது. அவள் ஒரு ராட்சசியாக மனதிற்குப் பட்டது. ஆகையால், தாமோதரனை, தனது தம்பியாக நினைக்காமல், தமயந்தியின் கணவனாக நினைத்தது போல், வாரேண்டா என்று கூட சொல்லாமல் புறப்பட்டு விட்டார்.

பெண் என்றும் பாராது, அழுத்தமாக உரசிக்கொண்டுபோய் இருக்கையில் உட்கார்ந்த தாமோதரனை, ரயில் தரையில் கால் ஊன்றி, குவியலாய் நின்ற முன்று பெண்களில் இருவர் முறைத்தார்கள். இவர்களில் சின்னவளான ஒருத்தி, போயும் போயும் இவன் தானா கம்பெனியா கிடைச்சான் என்பது மாதிரி அவனைப் பார்த்தாள் என்பதை விட, பழித்தாள் என்று கூட சொல்லலாம். அவளுக்கு, தனது மானசீகமான மன்மதக் கற்பனை தகர்ந்து போன கோபம். அந்த பெண்களை விட அவர்களை வழியனுப்ப வந்தவன் போல் பிளாட்பாரத்தில் நின்ற நடுத்தர மனிதருக்கு பெரும்கோபம். வெளிச்சத்திலேயே இப்படி உரசுகிறவன், இவள்கள் துங்கும் போது எப்படியோ?

அந்த நடுத்தரம், அந்த பெண்களை கண்களால் நிமிட்டி, அதே கண்களால் தாமோதரனை சுட்டிக்காட்டி ஜாக்கிரதை கேர்புல் என்றது. உடனே சின்னவள் எனக்கு காராத்தே தெரியும் என்கிறது உங்களுக்கு தெரியாதா அத்திம்பேர்?’ என்றாள். அப்படி சொன்னபடியே, தாமோதரனை பார்த்தாள். அவனது அலட்சியம், இவளை உலுக்கியது. இவளுக்கு காரத்தே தெரியும் என்பது அசல் கரடி. ஒருவேளை அவனுக்கு காராத்தே தெரியுமோ... அதனால் தான் இந்த அலட்சியமோ... குருவாயூரப்பா என்னப்பா இதெல்லாம்.

அந்த மெயில் நகராமலே திடுதிப்பென்று ஓடியது. தற்செயலாய் எழுந்த தாமோதரன், பிளாட்பாரத்தில் நின்றவருக்கு குவிந்து கைகளை ஆட்டிய அந்த முன்று பெண்களின் முதுகுகள் மீது முகம் போட்டு சாய்ந்தான். அவர்கள் உதறிய உதறலில் நல்ல வேளையாக இருக்கையில்தான் விழுந்தான். இதற்குள், ரயில், பேசின் பிர்ட்ஜை தாண்டி, வட்டமாய் வளைந்துக் கொண்டிருந்தது. அவன், தன்