பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சமுத்திரக் கதைகள்


தெரியும் சார்... இல்லாட்டி இப்படி கெஞ்சுவோமா ?

தாமோதரன், அந்த இருக்கையை துக்கி பிடிக்கும் ரப்பர் உறையிட்ட இரும்புச் சங்கிலிகளை பிடித்த படியே மேலே எம்பினான். ஏறவும் முடியாத இறங்கவும் முடியாத திரிசங்கு நிலை. மூச்சு முட்டியது. இதய துடிப்புகள் காதுகளுக்கே கேட்டன. உடனே அந்தப் பெண்கள் ஆபத்துக்கு பாவம் இல்லை என்பது போல், அவனது வயிற்றையும் கால்களையும் கைகளால் அனைத்துத் துக்கி, அவனை மேல் இருக்கையில் கொண்டு போட்டார்கள். பிறகு அவனுக்கு ஏதோ பெரிய சலுகை செய்து விட்டது போல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தாமோதரன், அப்படியே துங்கிப் போனான். ஆனாலும். இரவு இரண்டு மணியளவில் தலையை இருக்கைக்கு கீழே தொங்கப் போட்ட போது, அவன் தகாத விதமாக தங்களை நோட்டம் பார்ப்பதாக அனுமானித்து, துங்காமல் சும்மா கிடந்த இளையவள், அச்சத்தால் முந்தானை விலக எழுந்து, அபாயச் சங்கிலியை பிடித்து இழுக்க, வலது கைகைய நீட்டிய போது, தாமோதரன் தட்டுத் தடுமாறி

‘ரயில் பனங்காடில... இல்ல இல்ல பறப்பனகாடில அதுவும் தப்பு... பனங்காடிபறப்புல வரப்போ சொல்வீங்களா ?

‘எந்த நேரத்துக்குப் போகுதாம் ?

சரியா ஆறுமணிக்குன்னு என்னோட ஒய்ப் சொன்னாள்.’

‘சரி அய்ந்தரமணிக்கே உங்கள எழுப்பி விடுறேன். அதுவரைக்கும் அந்த பக்கமா திரும்பி கண்ண முடிண்டு துங்குங்கோ

அந்த முன்று பெண்களும் சரியாக ஜந்தரைமணிக்கு உசிப்பிவிட்ட உடம்பை, கால் மணி நேரத்தில் சரிசெய்தபடியே, தாமோதரன் பறப்பனங்காடி ரயில் நிலையத்தில் இறங்கினான். நீரில்லாத அகழியில் சக்கர கால் பதித்து நின்ற ரயிலுக்கு வரவேற்பு வளையம் போல் உள்ள தோரண பாலத்தில் நடந்தான். பாலத்தின் முகப்பில் தயாராக நின்ற கோழிக்கோடு பேருந்தில்