பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

சமுத்திரக் கதைகள்


குறிப்பையும் அவன் பெயரிலேயே எழுதி வைப்பார். ஆனால், நேற்றைய வாக்குவாதத்தால், அவர் தனது வேலையை மட்டுமே கவனித்தார்.

வாக்குவாதம் என்பதைவிட, ஒருவேளை பெருமாளின் வாக்கால், அவர் வதம் செய்யப்படக்கூடிய தகராறு. அவ்வப்போது காவல் நிலையத்திற்குள் உடம்பை வெளியே வைத்துக்கொண்டு, தலையை மட்டும் காட்டிவிட்டுப் போகும் சாமிநாதனைப் பார்த்து, அவன் வேலையையும் சேர்த்துப் பார்க்கும் கட்டாயத்திற்குள்ளான வயதான பெருமாள், ஏம்ப்பா சாமி... ஒருநாள் ஒரு பொழுதாவது உன் வேலையை பார்க்கக்கூடாதா...? என்று சிரித்தபடிதான் சொன்னார். அதுவும் கழண்டு கிடந்த அவன் சட்டையில் உள்ள ஈய உருண்டை பொத்தானை மாட்டியபடிதான் பேசினார். உடனே இவன், நாளையிலிருந்து என் வேலையை நீங்க பார்க்கக்கூடாது என்று ஆணைக்குரலில் பேசிவிட்டு, அவர் மாட்டிய பித்தானையும் கழட்டினான். கழட்டிக்கொண்டே, என் வேலையை, யாரை வைத்துப் பார்க்க வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும் என்றும் சொல்லி வைத்தான். அதிலிருந்த மிரட்டலைப் புரிந்து கொண்டவர்போல், பெருமாள், ஆரம்பத்தில் நடுங்கிப் போனார்.

இந்த சாமிநாதன், அசோகச் சக்கர அதிகாரியிடம் போட்டுக் கொடுத்து”, தன்னை தண்ணியில்லாத காட்டிற்கு மாற்றி, ஒரு தலையாட்டி சப்இன்ஸ்பெக்டரை கொண்டு வரப்போகிறான் என்பது புரிந்து விட்டது. ஆனாலும், தலைக்கு மேல் வெள்ளம் போன தைரியத்தில் அல்லது தத்தளிப்பில் அவர் மறுபேச்சு பேசவில்லை. இந்த சப்பயல் சாமிநாதனோடு இருப்பதைவிட தண்ணியில்லாத காடே மேல் என்று தன்னைத்தானே ஆற்றுப்படுத்திக் கொண்டார்.

இப்போது இந்த இருவரும் மூன்றடி இடைவெளியில் இருந்தாலும், முந்நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் போல் முகம் பார்க்க மறுத்தார்கள். பகல் பதினோரு மணிக்கு வந்துவிட்ட சாமிநாதன், பொதுநாள் குறிப்பேட்டில் எழுதத் துவங்கினான். இன்று காலைக் கடமை அறிக்கை துவக்கப்படுகிறது என்ற கோடிட்ட தலைப்புச் செய்திக்குக் கிழே, காலை ஏழு மணிக்கு கிரைம்