பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 151

பெரியார் தமிழிசை மன்றம்

இந்த நிலையைக் கண்டும், வெகுண்டும், எங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கும் “ஸ்டூடண்ட்ஸ் ஜெராக்ஸ்” உரிமையாளர் அருணாசலம் அவர்கள், தந்தை பெரியார் தமிழிசை மன்றம் என்ற அமைப்பை தோற்றுவித்திருக்கிறார். அண்மையில் இதன் இசைவிழா, மூன்று நாட்கள் சென்னையில் நடந்தது. ஆண்கள் மட்டுமே வாசித்து வந்த நாதசுரத்தை அருமையாக வாசித்துப் புகழ்பெற்ற மதுரை எம்.எஸ். பொன்னுத்தாய், திருப்பூர் சகோதரிகளான எஸ்.பி. சாரதா, கலைமாமணி ஏ.கே. காளிசுவரன் ஆகியோரைக் கவுரவித்தார்கள். இந்தப் பெரியவர் மூலம், சங்கரதாஸ் சுவாமிகளின் நூறு பாடல்களை தஞ்சைப் பல்கலைக்கழகம் ஒலிப்பதிவு செய்துள்ளது.

நாடறிந்த தமிழிசைச் செல்வன் முத்துக்கூத்தன், வெண்கலக் குரலில் தமிழ்ப் பாடல்களை ஒலிக்கும், டி.கே.எஸ். கலைவாணன் நாட்டுப்புற இசையை நயம்பட பாடும் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்களின் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் இக்கால நல்ல கவிஞர்களான கவிஞர் தாராபாரதி, கவிஞர் பல்லவன் போன்றோரின் பாடல்களையும் பாடியிருக்கிறார்கள். தமிழிசை, பழம் பாடல்களை மட்டும் பாடிக்கொண்டு இருக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. திரு. அருணாசல்ம் வெளியிட்டுள்ள ஒரு சிறுகுறிப்பு நூலில், தந்தை பெரியார் 1943-ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி குடியரசு இதழில், “தமிழ்ப் பாட்டுக்கள் என்றால், அ ைவ முழுக்க முழுக்க த் தமிழ் மொழியில் அமைந்தவைகளாகவே இருக்கவேண்டுமேயொழிய, 100க்கு 99 வடமொழி வார்த்தைகளைக் கொண்ட தமிழ்ப் பாட்டாயிருத்தல் கூடாது” என்று குறிப்பிட்டு, பல அரிய கருத்துக்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் கருத்து

1944-இல் தந்தை பெரியார் “நம் மொழியாவது, பாட்டு இசைக்கக்கூட பயன்படாது என்று சொன்னால் இந்த இழிமொழி நம் உயிரைப் போலல்லவா கவ்வுகிறதாய்” இருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். சுருக்கமாகச் சொன்னால். தமிழன், தான் நுகரும் இசையை. தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றி, தமிழர்களுக்கு ஏற்றதை... தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கிறேன்” என்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றியிருக்கிறார்.