பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகச் சுவையும், ஆழமும் கொண்டவை சு. சமுத்திரத்தின் படைப் பிலக்கியங்களா? அல்லது கட்டுரைகளா? என்று ஒரு பட்டிமண்டபமே நடத்தலாம். அந்த அளவிற்கு, இவரது கட்டுரைகளும் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. தினமலர், தினத் தந்தி, ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி, குமுதம், நவசக்தி ஆகிய பிரபல பத்திரிகைகளிலும், செம்மலர் உள்ளிட்ட இலக்கியப் பத்திரிகைகளிலும், இவரது கட்டுரைகள் எடுத்தாளப்படுகின்றன.

1947-ஆம் ஆண்டு டிசம்பர் 75-ஆம் தேதியன்று பிறந்து பெற்றோர் அற்ற பிள்ளையாய் பாட்டன், பாட்டி, வளர்த்தம்மா, தாய்மாமா, அத்தை ஆகியோரின் கிராமிய அரவணைப்பிலும், சித்தப்பா, சித்தி ஆகியோரின் நகரிய சேரி அரவணைப்பிலும், பட்டப்படிப்பை முடித்த இவர், பள்ளி ஆசிரியராகவும், கூட்டுறவுத் துறை மூத்த ஆய்வாளராகவும், பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாகவும், பின்னர் மத்திய அரசில் தொலைக்காட்சிவானொலி செய்தி ஆசிரியர், களவிளம்பரத் துறையின் இணை இயக்குநர் ஆகிய பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர். பல தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கொண்ட வள்ளலார் மக்கள் நேயப் பேரவை"யை நிறுவியர்.

பல்வேறு இலக்கிய பரிசுகளைப் பெற்ற இவர், இதுவரை ஏராளமான படைப் புகளை உருவாக்கியிருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வாய்மூடி மக்களின் மனச்சாட்சியாக எழுதியும், பேசியும், அதற்கேற்றபடி வாழ்ந்தும் வருகிறவர்.

- ஏகலைவன்