பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 23

சட்ட மெளனம்

உடமைகளோடு விளையாடும் விளம்பரங்களையும் கயதம்பட்டங்களையும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் ,உயிரோடு விளையாடும் விளம்பரங்களை - தம்பட்டங்களை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?. கேரளத்தில் ஒரு வைத்தியரின் மூலம் பல எய்ட்ஸ் நோயாளிகள் “குணமானார்கள்”. இந்த நோய் தீர்ப்பு குணமான எய்ட்ஸ் நோயாளிகள் மூலமே விளம்பரப்படுத்தப்பட்டது. நோயிலி ருந்து விடுதலை பெற்றதாக நம்பிய இந்த நோயாளிகள் மூன்று மாதத்திற்குப் பிறகு மீண்டும் பாயில் விழுந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில் ஸ்டெரிராய்ட் என்ற செயற்கை ஹார்மோனும், இதுமாதிரியான இதர சேர்க்கைகளும் மருந்துடன் கலந்து கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருத்துவர் எய்ட்ஸ் நோயாளிகள் மீது வியாபாரம் செய்வதும் வீதிக்கு வந்தது. இந்தவகை மருந்தை உட்கொண்டால் எந்த நோயாளியும் மூன்று மாதம் ஒருவித குனமாயையில் இருக்கலாம். பிறகு பழைய கதைதான். அதோடு இந்த ஸ்டெரிராய்ட் வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும். இவ்வளவு நடந்தபிறகும் இந்த புதிய எமன் மருத்துவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது சம்பந்தமாக சட்டம் என்ன சொல்கிறது என்று, எனது இனிய தோழரும், சமூகப்பிரக்ஞை உள்ள பிரபல வழக்கறிஞருமான செந் தி ல் நாதனிடம் கேட்டேன். சமூகவிரோதமாகக் கருதப்படும் நடவடிக்கைகள் குறித்தோ அல்லது தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு குறித்தோ விளம்பரங்கள் செய்தால் அரசே நடவடிக்கை எடுக்கலாமாம். அதேசமயம், நோய் நொடி சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர், காவல் துறையிடம் புகார் செய்யலாம் அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திற்கு போகலாம் என்றும், இந்த இரண்டையும் தவிர வேறுவழி சட்டத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார். விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு மாத்திரை, நான் குறிப்பிடுவது போல் பரவலாக சுகக் கேட்டை ஏற்படுத்தினால், அது வெளியே தெரிந்துவிடும் என்றும் வாதிட்டார்.

இதில் எனக்கு உடன்பாடு இல்லை கார ண ம் எல்லோருக்கும் காவல் துறையைப் பற்றியும் தெரியும். க ன் ஸ் யூ மர் கோர் ட் ைடப் பற்றி யும் தெரியும் .