பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மிளகாய்ச் சாதமும் மூங்கில் கம்புகளும்

தலையில் தனது காலை மிதித்துக் கொண்டும், மேலே இருப்பவனின் கால்களைப் பிடித்துக் கொண்டும் இருப்பதுதான் இந்திய சாதிக் கட்டுமானம். தமிழகத்தைப் பொறுத்த அளவில் ந 1 ன்கு வர்ண சாதி அமைப்பில் பிராமணர்களையும், சத்திரியர்களையும் தவிர்த்து வைசியர்களும், சூத்திரர்களும், ஆதிதிராவிடர்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்படாமல் இடங் கை ப் பிரிவு , வ லங்கை ப் பிரிவு எ ன் றே பிரிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களில் பறையர்கள் எனப்படுவோர் ஒருபக்கமும், பள்ளர்கள் எனப்படுவோர் இன்னொரு பக்கமும் நிறுத்தப்பட்டார்கள். ஆகமொத்தத்தில் நமது சாதிய அமைப்பில், தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினர், பிற்படுத்தப்பட்ட மக்களில் ஒரு பிரிவினரோடு சேர்ந்து கொண்டு தத்தம் மக்களையே அடித்துக் கொள்கிற வம்புத்தனமாக ஒரு கட்டுக்கோப்பு இருந்தது.

பிராமண எதிர்ப்புப் பற்றி பாரதி

இத்தகைய சாதியத்திற்கு எதிராக ஏற்பட்ட முதல் குரல் பிராமண எதிர்ப்பாக உருவானது. அந்தக் காலகட்டத்தில் இது நியாயமே. அந்தக் காலத்து தமிழக அரசின் பிராமணர் அல்லாத ஊழியர்கள் பிராமண ஆதிக்கம் மேலோங்கிய சென்னை நகரில் ஒட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட முடியாது. எடுப்புச் சாப்பாடுதான் எடுக்கலாம். இந்தத் தீண்டாமையை எதிர்த்து 1912ஆம் ஆண்டில் டாக்டர் நடேசனால் உருவாக்கப்பட்ட அமைப்பே பின்னர் திராவிடர் சங்கமாகி, நீதிக் கட்சியாகி, திராவிடக் கழகமானது. பொதுவாக இந்த இயக்கம் மேல் தட்டுக்காரர்களுக்காக பிராமணர்களை எதிர்த்து வந்தது. ஆகையால் தான் பாரதி 1921ஆம் ஆண்டில் சுதேசிமித்திரனில் எழுதிய கட்டுரையில் பிராமண எதிர்ப்பு இயக்கம் பிராமணர்களை ஒன்றும் செய்யாது என்றும், மாறாக சாதி இந்துக்கள் அரிஜனங்களை அடக்கவே பயன்படும் என்றும் தீர்க்கதரிசனமாகத் தெரிவித்தான்.

தந்தை பெரியார், சாதி ஒழிப்பு மாநாடு, தீண்டாமை ஒழிப்பு மாநாடு என்று வலுவான இயக்கத்தை நடத்தினாலும், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், நடுத்தட்டு மக்களுக்கும் பல்லக்குத் துக்கிகளாகவே இருந்தார்கள். இப்போதுதான் தாங்கள் வெறும் பல்லக்குத் தூக்கிகளாக இருந்திருப்பது இவர்களுக்கே புரிகிறது. சாதி இந்துக்களை

சுமக்கும் பல்லக்கை மெல்ல இறக்காமல் பலவந்தமாக