பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்...

உள்ளாகவேண்டும். அதேசமயம் இவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டால், இவர்களை இப்படித்துண்டாமல் தூண்டிவிடும் பேர்வழிகளுக்கு என்ன தண்டனை இருக்கிறது? தண்டனை இல்லையென்பதோடு, இதற்கு எதிர்விகிதத்தில் கார் கிடைக்கிறது, பங்களா கிடைக்கிறது. கள்ளப்பணம் மிதமிஞ்சிப் போகிறது. வெளிநாட்டு மேடைகளிலும் கைத்தட்டுக்கள் கிடைக்கின்றன. இந்தச்சினிமாக்காரர்கள், தங்களது சமூகவிரோத நடிப்பை நியாயப்படுத்துவது, விஞ்ஞானி அப்துல்கலாம் சாதனையைவிட அதிக சாதனையாக சித்தரிக்கப்படுகிறது.

வாரப்பத்திரிகைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அழகான இளம் பெண்ணின் படத்தை அட்டைப்படமாக போடாத வாரப்பத்திரிகையே கிடையாது. இந்த அழகிய அட்டைப்பட முகப்பில் பாகிஸ்தானை எப்படி முறியடிப்பது போன்ற கேள்விகள். ஒரு தொலைக்காட்சியில், அதோடு சம்பந்தப்பட்ட வாரப்பத்திரிகை குறித்த விளம்பரவரிகளை பேசுகிற பெண்குரல் படுக்கையறைக்கு கூப்பிடுவது போல் ஒலிக்கிறது. இப்படிக் குறிப்பிடுவதால், நான் பெண்களைக் குறைகூறுவதாக ஆகாது. வயிற்றுப் பிழைப்பிற்கு வரும் பெண்களை வைத்தே பெண்மை கொச்சைப் படுத்தப் படுகிறது என்பதே பிரச்சினை. இந்தப்பெண்களைப் போல எல்லாப்பெண்களும் இல்லை. இவர்கள் சிறுபான்மையினர்தான். ஒரு ஆணின் ஒழுக்கத்திற்கு ஒரு பெண்ணே தன் ஆடை அலங்காரம் மூலம் பொறுப்பு வகிக்கவேண்டும் என்ற அவலநிலை இருப்பதாக பெண்ணியப் போராளி மைதிலி சிவராமன் தெரிவிக்கும் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் இத்தகைய கலாச்சாரச் சீரழிவுகளுக்கு எதிராக இத்தகைய தன்னலமறுப்பு பெண்ணியப் போராளிகள் ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை. ஆணாதிக்க ஆண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

வாய்தாவே ஒரு அவதி

நீதிமன்றங்களும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதில்லை. அப்படியே வழங்கினாலும் அவை செய்திகளாவதில்லை. இந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம். அதனால்தான் இப்படி செய்தேன். ஆட்கள் பார்த்துவிட்டதால் அவள் அலட்டிக் கொண்டாள் என்று குற்றஞ் சாட்டப்பட்டவன் கூசாமல் சொல்லி வழக்கை இழுத்துக்கொண்டே போகலாம். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வாய்தா என்பதே இன்னொரு தண்டனை. இதனால்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீதிமன்ற வாய்தாவிற்கு அவதி என்ற மண்வாசனைச் சொல் ஏற்பட்டுள்ளது.