பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திரைப்பட அபத்தங்களும் ஆபத்துக்களும்.

நெறிகட்டுவது போல், வேறுசில அடிப்படைப் பிரச்சினைகள், பாலியல் உணர்வில் வரும். பொதுவாக அடிமன பயம் வெளிமனப் பாலியலாய் தோன்றும். இந்தப் பயத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. இப்படி வரும் பாலியல் மனநோய் பெண்கேலியாக வெளிப்படும். உடலுறவாலும் இந்த மனநோய் தீராது. அடிமனபயத்தை ஒழித்தால் வெளிமணப் பாலியல் வக்கிரம் விடுபடும். மனம் என்பது நெருப்பு மாதிரி எதையாவது ஒன்றை பற்றிக் கொண்டே நிற்கும். எனவே இளைஞர்கள் மனம் சமூகப்பொறுப்பை பற்றிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும். இவர்களுக்கு உளக் கோட்பாடுகளிலும் பயிற்சி கொடுக்கவேண்டும். இதனால், பெண்களை எள்ளி நகையாடுவது ஒருவித பேடித்தனம் என்பதை சம்பந்தப்பட்டவனால் அறிய முடியும்.

இறுதியாக, நமது திரைப்படங்களையும், தொலைக் காட்சிகளையும் பார்க்கும் போது இந்த நாட்டில் தணிக்கைக்குழு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. இதன் விதிகளை கடுமையாக்கி, செயல்பாட்டை தீவிரமாக்க வேண்டும். இல்லையானால் இத்தகைய தணிக்கைக்குழு, திரைப்படத்துறை, தொலைக்காட்சி, பத்திரிகை, காவல் துறை, நீதிமன்றம் ஆகிய மாபெரும் அமைப்புக்களின் சார்பில், நமது பெண்களை, வம்பர்கள் அவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இந்த சந்தர்ப்பத்தில் திரைப்பட அபத்தங்களையும் சொல்லியாக வேண்டும். அண்மையில் புதிதாக திருமணமான தன் தங்கையுடன், எனக்கு தெரிந்த ஒரு இளைஞர் அமெரிக்கா சென்றிருந்தார். அக்கா கணவரின் நண்பர்களான அமெரிக்கத் தம்பதிகள் புதுமண மக்களை வாழ்த்துவதற்கு அவர்கள் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது ஒரு அமெரிக்கர், புதிய தம்பதியரைப் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் டூயட் பாடி ஆடுங்கள்ணி என்று கேட்டிருக்கிறார். இவர்கள் மென்மையாக மறுத்ததோடு, அப்படி ஆணும் பெண்ணும் பாடிப்பாடி “பாடி"களை அணைத்துக் கொள்வது தமிழக மரபல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள். உடனே அந்த அமெரிக்கர், உங்கள் நாட்டு சினிமாக்களில் ஆணும் பெண்ணும் மரங்களைச் சுற்றியோ, மட்டைகளை சுற்றியோ, கோயில் குளங்களைச் சுற்றியோ ஆடுகிறார்களே, என்று கேட்டிருக்கிறார்கள். நமது தம்பதியர், சினிமாவில் வரும் டூயட் மாதிரி காதலன் காதலியோ, அல்லது கணவன் மனைவியோ பாட்டு பாடி ஆடுவதில்லை என்று விளக்கியிருக்கிறார்கள். அந்த அமெரிக்கர்கள் ஆச்சரியப்பட்டு போனார்களாம். இந்திய தம்பதியரோ அல்லது காதலர்களோ டூயட் பாடுவதைப் பார்த்துத்தான் இந்தியத் திரைப்படங்கள் காப்பி அடிக்கின்றன என்று அதுவரை நினைத்திருக்கிறார்கள்.