பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

எந்த மாநிலத்திலாவது கட்-அவுட்கள் பெரிதாக இருந்தால் அங்கே தமிழர்கள் வசிக்கிறார்கன் என்று அர்த்தம். இங்கே உள்ள தமிழன், அங்கே உள்ள தமிழனையும் சினிமாத்தனமாக்கி விட்டான். எந்த மாநிலத்திலும் நடிகர்களுக்கு சங்கங்கள் வைத்து, தோரணம் கட்டி, கற்பூர ஆராதனை செய்து, அவர்கள் காலடியில் மூளையை அடகு வைக்கும் முட்டாள்தனம் இல்லை. இங்கேதான் இந்த மாநிலம் ஒரு மனநோயாளி பூமியாகிவிட்டது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் தத்தம் தகுதிகளால் தனிநபர் வழிபாட்டுக்கு உள்ளானார்கள். ஆனால், இன்றோ த குதி இல்லாத ஒரு தலைவரைக் கூட, அவர் பேரை சொல்லி அழைக்க முடியாத அளவிற்கு அடிமைத்தனமான தொண்டர்களும், ஆணவத்தனமான தலைவர்களும் தோன்றி விட்டார்கள். குனிந்து விழுந்தால் இந்த ஆணவக்காரர்களுக்கு அல்லது காரிகளுக்கு கோபம் வரும் என்று அப்படியே தொப்பென்று விழுகின்றவர்களும், நமது பிரதிநிதிகளாக பல்வேறு அவைகளில் இருக்கிறார்கள். அன்று நான் கண்ட விபரீத நிலைமை, இப்போது விபத்தாகியிருக்கிறது. எந்த மண்ணை நேசிக்கிறேனோ அந்த மண்ணில் துகள்கள் கண்ணை உறுத்துகின்றன.

மேலே குறிப்பிட்ட சங்கதிகளிலிருந்து, நமது தமிழனை மீட்டு, பெரியவர் என்று வியக்காமலும், சிறியவர் என்று இகழாமலும் இருக்க வேண்டு மென்று நமது முன்னோர்களான கணியன் பூங்கு ன்ற னும், வைகுண்டர், வள்ளலார் போன்றவர்களும் அறிவுறுத்தியதை, செயலாக்க வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டதை காட்டுவதற்கே இந்த கட்டுரைத் தொகுப்பு. இந்தத் தொகுப்பு, பல தோழர்கள், கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது எழுதும் ஆய்வுக் கட்டுரைகள் மாதிரியல்ல. சாமான்யர்களுக்காக ஒரு சாமான்யன் மேற்கொண்ட கருத்துப் பகிர்வே இது.

எனவே, இன்றைய தமிழனை மீட்டு நாளைய நல்லதோர், வல்லதோர் தாயகத் தமிழனை உருவாக்க இப்போதே முயல வேண்டும். இல்லையானால் எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் குண்டர்களின் குண்டு கலாச்சாரத்திற்கு பலியாகலாம். இதற்கு ஒரு கலாச்சார புரட்சி தேவைப் படுகிறது. இல்லை யானால் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தாயகத் தமிழனும், தமிழும் காணாமல் போய்விடுவார்கள்.

இதையே, வாழ்க்கையின் மாலைப் பொழுதில் உள்ள இந்த தாயகத் தமிழ்ச் சமுதாயத்தின் தொண்டனாக கருதும் நான், இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு உயிலின் வரைவு போல் எழுதி முடிக்கிறேன்.

எனது கட்டுரைகளை பிரசுரித்த பிரசுரிக்கும் அத்தனை பத்திரிகைகளுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

தோழமையுடன், சு. சமுத்திரம்.