பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 ஒரு மனநோய்ச் சிறுவனுக்காக...

யார் மூலமோ வரவழைத்து திறப்புவிழாவையும் நடத்தி விட்டார். அந்த நிலத்தையும் விழுங்கி விட்டார்.

மன்னிப்பு மட்டும் போதுமா?

வேறுவழியில்லாமல் அப்போதைய சமூகநலத் துறை அமைச்சர் திருமதி. இந்திரகுமாரியின் பரிந்துரையின் பேரில் தாம்பரத்திலுள்ள அரசு மனநோய் சிறுவர் காப்பகத்தில் சேர்த்தேன். அங்கே, இந்தச் சிறுவன் துரும்பாக இளைத்து விட்டான். விசாரித்துப் பார்த்ததில் இத்தகைய சிறுவர்களுக்குரிய உணவு, உடை வகையறாக்கள் அதன் பராமரிப்பாளர்களுக்கே போய்ச் சேர்ந்ததாக தெரிந்தது. ஒரு அரசு நிறுவனத்தின் மோசடித்தனத்திற்கு இந்த நிறுவனம் ஒரு முன்னோடியானது. சகித்துக் கொண்டோம். ஒரு நாள், இந்த நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. கடிதம் இல்லை. கட்டளை. உங்கள் பையன் நோய்வாய்ப் பட்டிருக்கிறான். அவனை நீங்கள் உடனடியாக வீட்டிற்கு கூட்டிப்போகவேண்டும். இல்லையானால் அவன் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல. என்று ஒரு அரக்கத்தனமான தாக்கீது வந்தது.

ஒரு அரசு நிறுவனம், தன்னிடம் உள்ள பிள்ளைகளுக்கு மனநோயைத் தீர்க்க முடியவில்லையானாலும், உடல் நோயையாவது தீர்க்க வேண்டும். இதற்கான மருத்துவர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். சிறுவனுடைய உடல்நலத்தின் கடுமையை நாகரீகமாகவும் குடும்பத்தி னருக்கு தெரிவிக்கலாம். இதற்குப் புறம்பாக, இப்படி ஒரு காட்டு மிராண்டித்தனமான கடிதத்தை அனுப்பியது. இந்தக் கடிதவிவரத்தை எத்திராஜ் கல்லூரியின் சமூக அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் நான் குறிப்பிட்டேன். மனிதநேயரான தமிழக அரசின் சமூகநலத்துறை செயலாளர் திரு. தீனதயாளு அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் இத்தகைய போக்கிற்கு எதிராக எதுவுமே செய்யவில்லை. செய்ய முடியவில்லையோ என்னவோ..

பதிலுக்குப் பதிலாய்.....

மத்திய அரசின் களவிளம்பரத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிய நான், இந்தச்சிறுவனை மதுரைப் பக்கம் அரசு நிதியோடு இயங்கும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் (என்.ஜி.ஓ) சேர்த்தேன். எனது பரிந்துரையை மிகப்பெரிய கவுரவமாக அந்த நிறுவனம் கருதியது. ஆனாலும் அடுத்த மாதமே அந்த இயக்குநர் சென்னையில் சாஸ்திரி பவனில் என்னைச் சந்தித்து தமது நிறுவனம் தயாரித்து மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பி