பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 91

இருக்கும் லட்சக்கணக்கான ரூபாய் செயல்திட்டங்களுக்கு நான் அனுமதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் தலையாட்டியிருந்தால் கமிஷனும் கொடுத்திருப்பார். நான் கையை விரித்தபோது, அந்த பையனின் காலை இடறிவிட்டார்கள்.

நானும் சளைக்கவில்லை. சமூகநலத்துறைக்கு புதிய அமைச்சராக சேர்ந்த திருமதி. சற்குணபாண்டியன் அவர்களைச் சந்தித்தேன். கல்லூரி காலத்தில் அவர் தி.மு.க. பேச்சாளராகவும், நான் காங்கிரஸ் பேச்சாளாராகவும் எதிரும் புதிருமாக செயல்பட்டாலும் நன்கு பரிச்சயமானவர். அவரும் பாலவாக்கத்திற்கு அருகே உள்ள ஒரு நிறுவனத்திற்குப் பரிந்துரைத்தார். இந்தச் சிறுவனை கூட்டிக்கொண்டு சென்ற அவன் தந்தையின் ஏழ்மைக்கோலத்தை பார்த்தோ என்னவோ, அந்த நிறுவனமும் கைவிரித்துவிட்டது.

சமூகசேவை நடிகை

ஒரு பொது நிகழ்ச்சியில் நானும், பிரபல சமூகசேவை’ நடிகையும் கலந்து கொண்டு உரையாற்றினோம். ஏற்கனவே அவர் எனக்கு நன்கு பழக்கமானவர். சமூகநல அமைப்புக்களில் செயல்படுவதாகக் கூறி மாலை மரியாதைகளை வாங்கிக் கொள்கிறவர். சென்னை கோட்டுரில் உள்ள இத்தகைய சிறுவர் காப்பகத்தில் ஈடுபாடு கொண்டவராய்க் கருதப்படுகிறவர். இந்தச் சிறுவனை அங்கே சேர்க்கலாமா என்று அவரிடம் கேட்டேன். அந்தப் பையனின் நிலைமையை எடுத்துச் சொன்னேன். இயலாது என்று ஒற்றைச் சொல்லில் முடித்து விட்டார். ஒருவேளை இவர் இந்தச் சிறுவனைப்பற்றி திரைப்படமோ அல்லது தொலைக்காட்சித் தொடரோ தயாரித்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி பத்மஸ்ரீ பட்டம்கூட வாங்கலாம்.

அஞ்ஞான வாசத்தில்.

இவனது அஞ்ஞான வாசத்தை தடுக்கும் விடுமுறைக் கால ஏற்பாடாக, நான் வாழும் பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் இவனைச் சேர்த்துக் கொண்டது. சேர்த்த மறுநாளே, இந்த நிறுவனத்திற்கு யாரோ ஒருவர் ஒரு காரை அன்பளிப்பாய் வழங்கியிருப்பதாகவும், அமைச்சர் சற்குணபாண்டியன் அவர்கள் அந்த கொடையாளி சார்பில் காரின் சாவியை தொலைக்காட்சி சாட்சியாக இவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இதற்குரிய ஏற்பாடுகளை நான் செய்யவேண்டும் என்றும் எனக்கொரு செய்தி வந்தது. நான்கூட, இந்தப்பையனின் நலத்திற்காக இந்த ஏற்பாட்டை செய்வதற்கு முயற்சித்திருப்பேன். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்கள், தனது மகன் திருமண அழைப்பிதழை என் இல்லத்திற்குக் கொண்டு வருவதாகவும், நான் வீட்டிலேயே இருக்கவேண்டும்