பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


பிள்ளையார் வாது செய்ய முடிவு செய்து கொண்டு பாண்டிமா தேவியைத் தேற்றுகின்றார். எங்கும் சிவன் உள்ளானாதலின் எல்லாம் சைவமே என்று ஞானசம்பந்தர் பாடிய பாட்டினை மனத்துட் கொண்டு ஒட்டக்கூத்தர் ஞானசம்பந்தரை இவ்வாறு பேசச் செய்கிறார்.

“கனலெங்கன லக்கன லால்விளையுங்
     கார்காரவை வந்து தருங்கலுழிப்
புனலெம்புனல் யாமிடு மேடுசுடா.
     போகாதிரி யக்கொடு போமெனவே”

அமணர்களோ "அந்நீரையும் நெருப்பையும் நாங்கள் பணிகொள்வதைப் பாராய்" என்று வீரம் பேசுகின்றனர். ஆனால், அவர்கள் எழுதிய ஏடு எரிகிறது; வைகையில் விட்ட ஏடு கடலிற் புகுகிறது. பிள்ளையார் எழுதிய ஏடு நெருப்பில் எரியாது சிறக்கின்றது. அவர் நீரிலிட்ட ஏடு ஆற்றிற்கு எதிர் பிடித்து ஓடுகிறது. எல்லோரும் ஆரவாரிக்கின்றனர். சைவ ஆற்றலைக் காட்டவிரும்புகிறார் பிள்ளையார்.

"வாராயிவ ராகம துல்லபமும்
      வருமெங்கள் சிவாகம வல்லபமும்
பாராய்வழு தீஈது பாருருவத்
      திருவிக்ரம மின்று படும்படியே."

அவர் கைப்பட்டதும் கூன் பாண்டியன் கூன்நீங்கி நிமிர்கிறான்; முன்னினும் மிக்க அழகு கொண்டு விளங்குகிறான்.

கழுவேறுதல் தொடங்கப்போகும் நிலையில் சில பாடல்கள் தக்கயாகப் பரணியில் சிதைந்து போயிருக்கக் காண்கிறோம். ஆனால்,