பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


நம்பியாண்டார் நம்பியின் பாடல்களையும் ஆராய்ந்ததால் சேக்கிழார் கழுவேறிய கதை கூறுகின்றார். திருத்தொண்டத் தொகையே முதனூலாகவும், நம்பியாண்டார் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியே வழி நூலாகவும் கொண்டு, தம் பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் பாடுகின்ற சேக்கிழார் வழிநூலுடையார் கூறிவற்றை எவ்வாறு புறக்கணிப்பார்? ஆதலின், இக்கழுவேறிய கதை சேக்கிழார் ஆராய்ச்சியின் பயன் அன்று என்க. அவர் ஆராய்ச்சியின் பயனாயின் அதனை நம்பத்தக்கதன்று என்று எவரும் கூற முன் வாரார்.

ஆனால், நம்பியாண்டார் நம்பியின் பாடல்படி சம்பந்தரே அமணர்களைக் கழுவேற்றியவர் ஆவர். அந்தக் கதையையே திருவிளையாடற் புராணங்கள் கூறுகின்றன. சேக்கிழாரோ அக்கதையைக் கூறவில்லை. சமணர்கள்மேல் பழியைச் சுமத்துகின்றார். ஏன் இவ்வாறு பாடுகின்றார்? சேக்கிழார் பலமுறையும் திருமுறையை ஓதியிருப்பார். ஆதலின், அதிலே சம்பந்தர் ‘வெகுளேன்மின்’ என்று பிறருடைய சினத்தையும் தணிவித்துப் பாடல் பாடிப் போவதைக் கண்டிருப்பார். ஆதலின் அத்தகையார், கழு ஏற்ற முன் வந்திரார் என முடிவு கட்டியிருப்பர். ஆனால், நம்பியாண்டார் நம்பியே இக்கதையைக் கூறுகின்றார். ஆதலின், இக்கதை எவ்வாறு திருமுறைக்கு முராணாகதபடி நடந்திருக்கலாம் என எண்ணியிருப்பார்.