பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


நடைபெறவில்லை என்றே கூறவேண்டும். அப்போதுதான், இந்தக் கதையும் உருவானது போலும். ஆனால், திருநாவுக்கரசர் பிறமொழிச் சமணர்பலர் ஏதோ ஓர் எதிர்பாராத இடையூற்றால் அழிந்ததனைப் பாடுகின்றார். “வாயிருந்தமிழே படித்தாளுறா ஆயிரஞ் சமணும் அழிவாக்கினான்” எனப் பாடுவதனையே பின்னோர் இந்தக் கதைக்கு அடிப்படை ஆக்கிக் கொண்டார்கள் போலும்!

மேலும் சில குறிப்புக்களை விளக்கினால் மட்டுமே உண்மை விளங்கும். சமுதாயச்சிக்கல் போராட்டமாகவும் வளர்வதனை இந்த நாளில் பலர் ஆராய்கின்றனர். மொழி, மதம், சமயம், த‍த்துவம், சாதி முதலிய அடிப்படையில் இந்தச் சிக்கல்கள் எழும். இங்கு நாம் கூறிவந்தது அத்தகைய சிக்கலை ஆராய்வாருக்கும் பயன்படும். ஆதலின், த‍த்துவத்தின் அடிப்படையில் எழுந்த வேறுபாடுகளையும் விளக்குதல் வேண்டும். இந்த வேறுபாடும் உள் எழுந்த இயற்கை வெறுப்பிற்குக் காரணம் கற்பிப்பது போலாம் என மனநூல் அறிஞர் கூறுவர்.