பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


 

6. வெறுப்பின் விளக்கம்

I. பௌத்தரும் சம்பந்தரும்


ஞான சம்பந்தர் சமணர்களையும் புத்தர்களையும் வைது பாடும் இடங்களும் உண்டு. “அவர்கள் சொற்களைக் கேட்க வேண்டா; அவர்களை ஆண்டவன் அழிக்கின்றார்” என்றெல்லாம் அவர் பாடுகின்றார்; ஆனால், அவர்களிடத்தில் மக்களுக்கு ஈடுபாடு இருந்ததனையும் அவர் தம் பாடல்களில் பல இடத்தும் சுட்டுகின்றார்; அவர்கள் பேச்சு அறவுரைபோல் தோன்றுவதனையும் வற்புறுத்துகின்றார். அவர்கள் பேச்சைக் கேட்டு, “மயங்காதீர்கள்” என்று இதனாலேயே உலகினையும் நெஞ்சினையும் நோக்கிப் பாடுகின்றார். பொதுவாக இவர்கள் வேத வேள்விகளைப் பழித்துரைப்பதனைச் சுட்டிக்காட்டி இவர்கள் கூறும் தலைவர்களும் கடவுளர்களும் சிவபெருமானை வணங்குவதாகவும் அவர் கூறுகிறார்.

மூடிய சீவரத்தர் முதுமட்டையர் மோட்டமணர்
நாடிய தேவ ரெல்லா நயந்தேத்திய நன்னலத்தான் (3436)

(தேவாரம் சைவசித்தாந்த சமாஜப் பதிப்பு)

மூடிய சீவரத்தர் முதிர்பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ்சப்படுந் தேவர்பிரான் (3447)

பௌத்தர்கள் “எல்லாம் பாழ்” என்று சூனியவாதம் பேசுபவர்கள். அவர்கள் கூறுவதனை இவ்வாறு விளக்கலாம்:- ஒன்றும் நிலைபேறுடை-