பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


போதிமரம் என வழிபடுவோர் என்பதாம். பிடக்கு என்பது அவர்களது திரிபிடகம் என்ற நூல்களைக் குறிப்பதாம். மண்டை என்றும், சுரை ஓடு என்றும் கூறுவன புத்தர்கள் கையில் ஏந்திச் சென்ற உண்கலத்தைக் குறிப்பதாம். புத்தர் என்றும் இவர்களுக்குப் பெயர். தேர‍ர் என்பது தேரவாத‍த்தைப் பின்பற்றும் ஒருவகைப் பௌத்தர்களைக் குறிப்பதாம். இதனைத் திருஞானசம்பந்தர் புராணத்தில் (916 முதல் 924வரை) சம்பந்தர் புத்தரோடு வாதிப்பதனைச் சேக்கிழார் கூறுவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நிலையான ஒரு பொருள் என்றும் மாறாது எல்லாவற்றிற்கும் அடிப்படையாய், எங்கும் நிறைந்த முழுப்பொருளாய், எல்லாவற்றையும் அறியும் பேரறிவே வடிவாக, முடிவிலா இன்பமே தன் இயல்பாக, அருள் கொழித்து நிற்கின்றது என்பதே சம்பந்தர் கொள்கை. “நெறியில் வருபேராவகை நினையா நினைவொன்று” (193) இதுவே ஆம். இதனை “அறிவில் சமண் ஆதர்” (193) என்பர் சம்பந்தர். சம்பந்தர் கூறும் கடவுளை ஆத்தமாக அவர்கள் அறியவில்லையாம். (1882). காரணங்களுக்கு எல்லாம் காரணமான கடவுளை அவர்கள் அறியவில்லையாம். (3392)

இந்த உலகம் அத்தனையும் பிராந்தி, பொய்ம்மயக்கம் என்று கூறுகின்றவர்களைப் “பிண்டம் உண்ணும் பிராந்தர்” (292) என்று, சம்பந்தர் கூறுகிறார். “மடங்கொண்ட விரும்பிய