பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121


றனர். ஆண் பிறவிக்கே வீடு பேறு உண்டென்றும், பெண் துறவிகள் எத்தனைதான் துறவில் சிறந்திருந்தாலும் வீடுபேறு அடையார் என்றும் கூறும் திகம்பரக் கொள்கைக்கு இணங்க‍க் குரத்திகளாம் பெண் துறவிகளை அருகநிலை அடைவதாக‍க் கொண்டு வழிபடுவது இல்லை என்பதே குரத்திகட்பேணார் என்பதால் விளங்குவதாம். எனவே, “கணிகை நோன்பினர்” என்பது க்ஷணிக‍க் காட்சியையே குறிப்பது எனலாம்.

“குணமறிவுகள் நிலையில பொருளுரை மருவிய
பொருள்களுமில திணமெனுமவர்” (226)

என்பது பௌத்தர் கொள்கையைக் குறிப்பதாம். சொல்லால் வழங்கும் பொருள்களெல்லாம் - நாம் பேசிவரும் பொருள்கள் எல்லாம்- இல்லாதவையே; வெறுந் தோற்றமே. பொருள் என்றும், குணம் என்றும், அவற்றை அறியும் அறிவு என்றும் கூறுவன எல்லாம் இமைக்கிமை தோன்றி அழிகின்ற நிலையிலாப் பொருள்களேயாம். இது முடிந்த முடிபு. இவ்வாறு “எல்லாம் க்ஷணிகம்” என்று அறியும் அறிவே விடுதலை நிலை; வீடு பேறு; இவை க்ஷணிகம் என்று உணராது நிலையானவை என மயங்க அறிதலே கட்டுப்படலாம்.

“சாக்கியர்” எனப் பெறுவதால் பௌத்தர்கள் சாக்கிய முனியைப் பின்பற்றுவோர் என்பதாம். போதியார் என்பது புத்தர்பெருமான் மெய்யுணர்வு பெற்ற அரசமரத்தைப்