பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125

 

II. ஆரம்பர்

சம்பந்தர் சமணர்களை ஆரம்பர் என்று கூறுகிறார் (106). ஆரம்பர் என்பதனைத் தொடக்க நிலையில் உள்ளார், செருக்குடையார் என்ற பொருளொடு அணுக்களின் கூட்டத்தால் உலகம் உண்டாகும் என்று கூறும் ஆரம்பவாதம் எனும் கொள்கையினர் என்ற பொருளையும் குறிப்பதாக‍க் கொள்ளலாம். மாயை, சூன்யம் முதலியவற்றை உலகத்தின் தோற்றத்திற்கு அடிப்படையாக‍க் கொள்ளாது ஒவ்வொரு கொள்ளிடம் (பிரதேசம்) உடைய பரமாணுவினை அடிப்படையாக‍க் கொண்டு, அவற்றின் கூட்டத்தால் அணுத்திரளும் (ஸ்கந்தமும்), அவற்றின் சேர்க்கையால் பல பல வடிவங்களாம் உலகமும் தோன்றும் என்பர் சைனர். பௌத்தரில் வைபாடிகரும் பரமாணுக்களின் கூட்டமாய் உலகம் காணப்படுபொருளாம் என்று கூறுவதால் அந்த அளவில் ஆரம்பர் என அவர்களையும் உட்கொண்டு கூறுகின்றார் போலும் சம்பந்தர்.

“வேர்வந்துற மாசூர்தர வெயில் நின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையா வருவாரும்
ஆரம்பர் தம்முரை கொள்ளன்மின்” (106)

எனல் காண்க.

அணுவினை அடிப்படையாக‍க் கொண்டு பிறவற்றையும் விளக்குவர் அருகர். பிரதேசம் என்று அவர்கள் கூறுவதனைக் கொள் இடம் எனலாம். ஒரு பரமாணு இருக்கும் இடமே ஒரு