பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


எல்லாவற்றிற்கும் முந்துற முந்திக் காரணமாய் இருப்பது கடவுளே என்பது சம்பந்தர் கொள்கை. காரணங்களுக்கெல்லாம் காரணமான அதனை அவர்கள் அறியவில்லை என்பதே இவர் முறைபாடு.


III “உண்டும் இல்லையும் எனல்”

[ஸத்யாத் வாதம் - முறைமை நிலையுண்மை]


சமணர்களைப் பற்றிச் சம்பந்தர் கூறும் மற்றொரு குறிப்பு அவர்களுடைய த‍த்துவ சாத்திரத்தின் அடிப்படை நோக்கத்தை விளக்குவதாம்.

“அத்தகு பொருள் உண்டு மில்லையும்” (3213)

என்று கூறுபவர் என்றும்,

“உண்டிலை யென்றே தம் கையினில் உண்போர்” (1056) என்றும் அவர் பாடுகிறார். பரஞ்சோதியார் போன்று பின் வந்த நூலோர் “அத்தி நாத்தி” என்று இதனையே எள்ளிநகையாடுவர்.

உலகில் உள் பொருள் எவை என்று ஆராய்வார் பல வகையினர். தனித்தனியே பொருள்களின் உண்மை நிலையைக் கூறமுடியும் என்று கொள்ளுவோர் கொள்கைத் தனிநிலைக் கொள்கையாம். ஆனால், பொருள்களோ ஒன்றோடு ஒன்று இயைந்து ஒன்றாய் மயங்கிக் கிடப்பதில் இவ்வாறு தனிநிலைக் கொள்கை கூறுவது பொருந்தாது என்றும், ஒன்றோடு ஒன்று இயைந்த பல இயைபுகளையும் முறைமை-