பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


இங்கே,

“உச்சிக்கொளாமை உண்பார்
உரைக்கும் குண்டர்கள் அரைக்கூறை யிலார்”

எனப்பிரித்துக் கூட்டிப் புத்தர் சமணர் குண்டர் என்ற மூவரையும் குறிப்பதாக‍க் கொள்ளவேண்டும். அவ்வாறு இன்றிக் குண்டர் என்பதற்குக் “கையர் - இழிவானவர்” எனப் பொருள்கொண்டு புத்தரைக் குறிப்பதாகப் பொருள் கொள்வதும் கூடுமேனும் அது பிற இடங்களோடு பொருந்துமாறு இல்லை. “குண்டு முற்றிக் கூறையின்றியே பிண்டம் உண்ணும் பிராந்தர்” (292) என்பதில் கூறை யின்றியார் எனப் பிரித்துக் கூட்டிச் சமணரையும் “பிண்டம் உண்ணும் பிராந்தர்” எனப் பிரித்துக் கூட்டிப் புத்தரையும் சுட்டுவதாகப் பொருள் கொள்ளவேண்டும். “கழுக்கள் தின்று கழிமீன் கவர்வார்” என்பது போன்ற இடங்களிலும் இவ்வாறே விகுதி பிரித்துக் கூட்டிப் பொருள் கொண்டுள்ளோம்.

இவ்வாறானால், குண்டர் என்பது சிறப்பாக ஆசீவகர்க்கும், பொதுவாக அம்மணமாய் நிற்கும் சைனர்க்கும் பெயராம். புத்தரோடு சைனரைச் சுட்டுவதே பெரும்பான்மையாதலின் புத்தரைக் கூறிப் பின் சமணர் என்னாது குண்டர் என்று ஒழிந்த இடங்களில் எல்லாம் ஆசிவகரோடு சைனரும் சுட்டப் பெற்றுள்ளார்கள் எனக் கருத இடமுண்டு.

குண்டாய் முற்றும் திரிவார் கூறைமெய்
போர்த்துமிண்டாய் (1089)