பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


போழம் என்றால் முறைகேடான பிளவுப் பேச்சு. போழ்க்கன் என்பது காண்க. புத்த பெருமானது நல்லுரைகளை மூன்று நூல்களாகப் பின் வந்தோர் தொகுத்தனர். அறவுரைகளாகிய பூக்களைத் தொகுத்து வைத்த பூக்கூடைகள் என்று அந்நூல்களுக்குப் பெயர் வழங்கல் ஆயிற்று. பூக்கூடை என்பதனைப் பாலி மொழியில் ‘பிடக்கு’ என்பர். அதனால் புத்தர்களுக்குப் பிடக்கர் என்னும் பெயர் வந்தது. புத்தரது அறவுரைகளாகிய போதுகளை உலகினருக்கு விலைகூறித் திரியும் புத்தர்களும் ஆலங்காட்டடிகளே. குறக் கெடுத்துக் (வேழம்) குடையும் வரையில், வெயிலிலே நின்று நோன்பு (தவம்) நோற்றுத் திரியும் சமணர்களும் ஆலங்காட்டடிகளே; எருவிற் புரளும் பன்றி (கேழம்) போல, அழுக்கிற் புரண்டு,தீமையே நச்சித்திரியும் இத்தகைய இயல்பு கெட, நல்லுணர்வு கொளுத்தி, அவர்களில் நல்லோரது அறவுரையைக் கேட்பிப்பவரும் ஆலங்காட்டடிகளே ஆவர். இவ்வாறு கேடுள்ள பொருள்கள் போலத் தோன்றினாலும் கேடிலா இன்ப அன்பில் ஆழ்ந்து விளங்கும் தவப்பெரியோர் ஆவர்.


III

எனவே, யாதோ ஒரு குறிப்பினால் இறைவன் படைத்தருளிய கொள்கையை அழித்தலும் இறைவனைப் பழித்தலாக முடியும். அதுபற்றி அன்றோ சமணர்களோடு மன்றாடப் புகுந்தபோது, இறைவன் இணக்கத்தை விரும்பி நிற்-