பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


ணரும், புத்தரும் உடையைத் துறப்பதாலும் போர்த்துவதாலும் வீட்டு நெறியே போகலாம் என எடுத்துரைத்து, மன்றாடியது பற்றியே பழித்துரையாட நேர்ந்தது. உடை துறந்த நிலையைப் பாவின் நயமெலாம் பரந்து வரப் புனைந்துரைக்கின்றனர், சமணரில் ஒருவராகிய திருத்தக்க தேவர்,

மணியுறை கழிப்பது போல மங்கலப்
பணிவரும் பைந்துகில் நீக்கிப் பாற்கடல்
அணிபெற அரும்பிய அருக்கனாம் எனத்
திணிநிலத் தியன்றதோர் திலகம் ஆயினான்.

என வரும் சிந்தாமணிச் செய்யுளைக் காண்க.

“பெட்டியில் மறைத்து வைத்த மணியினை, வெளியெடுத்தபோது, விளங்குவது போல, நன்மையமைந்ததாய்க் குறை கூறுவதற்கரியதாய்த் தன்னுடலொளியை மறைத்த பைந்துகிலை, நீக்கியபோது, பாற்கடலில் அழகாகத் தோன்றிய கதிரவன் உலகத்தினிடை வந்தன‍ன் என்று கண்டோர் வியக்குமாறு, உலகின் முகத்திற்கே அழகு திரும் திருப்பொட்டாய் விளங்கினான் சீவகன்” எனப் புனைந்துரைக்கின்றார். இத்தகைய புனைந்துரைகளைக் கேட்ட சம்பந்தர் பழித்துரையாட முன்வந்தார்.

உடையினைத் துறப்பதே பெருந்துறவென்றபோது உண்மையினைக் கூறி, அதனை மறுத்துரையாட வேண்டாவா?