பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23



“குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப் போய்,
அறங் காட்டும் சமணரும் சாக்கியரும்:”

(திருமுறை 3-பதிகம் 177)

“காட்டு மிராண்டிகளான குறவரும் நால்விரல் அவ்வளவு உடையணிவர். (கோல்-கோலம்) அவ் வொப்பனையையும் துறப்பதே துறவு; அஃதே அறம் என ஒழுக்கம் காட்டுகின்றனரே சமணர்!” என நயம்பட எள்ளி நகையாடுகின்றனர்.

“ஆடை தவிர்த் தறங்காட்டும் அவர்கள்” [2-204]

“உடையைத் துறந்து உடலைக் காட்டுவதே அறங்காட்டுவதாகுமோ? உமது உடலமோ அறப்பேழையாவது” என எவரும் நகைகொள எடுத்துக் காட்டுகின்றார்.

“பெண்ணகத் தெழிற் சாக்கியப் பேய்” [3-305]

என்று பாடுகின்ற சம்பந்தர், புத்தர்கள் போல உடலெல்லாம் மூடித் திரிவதையே பழிக்கின்றார் போலும்! ஒருவர் உடை துறத்தலைப் புகழ, மற்றையார் உடை அணிவதைப் புகழ்வதைக் கண்டு இரு கொள்கையினையும் ஒருங்கே வைத்திகழ்ந்து முரணபாட்டை நன்கு விளக்குகின்றார்.

நக்குருவாயரும் துவராடை நயந்துடையாம்
பக்கர்கள். (3-319)

ஆடை தவர்ந்தறங் காட்டுபவர்களும்
அந்துவராடைச் சோடைகள்