பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


கொலையுண்ணும் உயிர்களின் வருத்தங்கண்டு அன்பினால் வாடிய மனத்தவராகிய தொண்டர்கள் “ஊனோடு உண்ணுதல் தீதே” என்று பேசப் புகுந்தனர்; இவர்கள் இருவரிடையே இறைவன் நடுநிலையாய் நின்றான். பால், தயிர், நெய், எரு, சிறுநீர் என்ற ஐந்தையும், ஆனினிடம் நின்றும் பெற்று நாளும் ஆடுகின்றான் ஆனைக்காவான். அவ்வாறு அவனுக்கு உதவும் ஆனினைக் கொன்று அதன் ஊனை உண்ணுவது எங்ஙனம்? “ஆனைந்தாடியே ஊன் தீதென்ற வாய்மையை மன்னி நின்று விளக்கினான்”—இதற்கு இவ்வாறு பொருள் கொள்ளாது “ஊன் உண்டல் தீது” என்றும் “நன்று” என்றும் அன்பர்கள் மன்றாடி நின்றனர் என்று பொருள் கொண்டால் “அன்பினால் பேச” என்பது வெறுஞ்சொல் தொடுத்தலாகவும் முடிவது காண்க. அன்பினாலேயோ ஒருவர் “ஊன் உண்டல் நன்று” என்பர். அவ்வாறே பொருள் கொண்டாலும் சமணரும் புத்தரும் அல்லாதாரிடை “ஊன் உண்பது நன்றா, தீதா?” என்ற வழக்கு எழுந்தது என்று ஏற்படும் அன்றோ? முன் ஊனுண்ட அன்னோர் அவ்வாறாக, முன் ஊன் உண்ணாத இன்னோர் என் செய்தனர்?

விடக்கொருவர் நன்றேன விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவர் உடம்பினை மறைக்கும்,
படக்கர்கள்-