பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


எனப் பாடுகின்றார் சம்பந்தர். கொல்லா அறமே மேற்கொண்ட சமணரும் புத்தரும் புலால் உண்ணாமையைப்பற்றி எதிர் வழக்கிடத் தொடங்கினராம். எதிர் வழக்கோடு நின்று விட்டால் பழியொன்றுமில்லையே? வாயைக் கட்ட முடியாத சில துறவிகள் தங்களுடைய தவப்பள்ளிக்கருகே ஓடும் கழியில் ஒருவரும் அறியாதபடி மீன் பிடித்துத் தின்றனராம்.

கழியருகு பள்ளியிடமாக அடுமீன்கள் கவர்வாரும் (3)
கடுக்கள் தின்று கழிமீன் கவர்வார்கள். (2)

எனச் சம்பந்தர் பாடுகின்றார். வெளியே கடுத் தின்பது போல் உலகை மருட்டி உள்ளே மீன் தின்றால் என் என்பது? இவர்கள் புத்தர்கள் மட்டுமே என்று கூறுவதற்கு இல்லை.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

என்றபடி இவர்கள் உள்ளமேனும் இவர்களைப் பழித்திராதோ! அம்மட்டோ! கொல்லாமை என்பது உண்மையில் கசிந்து கரைந்து உருகும் அன்பே அன்றோ?

உருகு சிந்தை இல்லார்.

எனல் காண்க.

இவர்கள் அந்த அறவழி நிற்பது எங்ஙனம்? ஆடும் பிறவும் கண்டு, இரக்கம் உடையார் போல அறம் பல எடுத்துரைத்துத் தனிவழியே தம் பள்ளியருகே அவை வரின் அவற்றின் புலாலை விரும்பி, அவற்றைக் கவர்ந்தனராம்.