பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53


பல்லறங் காட்டியே வரு மாடெலாம்
கவர்கையரைக் கசிவொன்றிலாச் சேட்டைகள்.

எனச் சம்பந்தர் பாடுதல் காண்க.

வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

என்றும்,

தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ்ந் தற்று.

என்றும் கூறுஉம் வள்ளுவர் திருக்குறள்கள் இவ் இடத்திற்கு ஏற்றவை அன்றோ?

துறவினையும் மறந்தனர் என்றும் குறிப்பிடுகின்றார் சம்பந்தர். புத்தரிடையும், சமணரிடையும் பெண்களும் துறவிகளாயினர். சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகளும், சிந்தாமணியில் விஜயையும் சமணராய்ப் பெருந் துறவிகளாய்ச் சிறந்து விளங்க‍க் காண்கின்றோம். மணிமேகலை புத்தர் கொள்கையைத் தழுவி அறங் கேட்டுத் துறவு புகுந்தமையைச் சீத்தலைச் சாத்தனார் பாடுகின்றார். ஆரியாங்கனைகள் என்றும், குரத்திகள் என்றும் இன்னோர் பெயர் பெற்றனர்.

நாணார் அமணர் நல்லதறியார் நாளுங்
குரத்திகட் பேணார்.

என்று பாடுகின்றார் சம்பந்தர். பேணுதலாவது விரும்புதலும் போற்றுதலுமாம். அவர்களை உண்மையில் விரும்பிப் போற்றுதலாவது, அவர்களது துறவினைக் காத்தலாம். துறவினைப்