பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


இவையனைத்தும் சமணர்க்கே சிறப்பாய் உரிய குறைகள் அல்ல. இக்காலத்தில் எத்துணைத் துறவிகள் கள்ளுண்டு, புலால் தின்று, பொது மகளிரையும் துறவிகளென உடன் கொண்டே ஏகுகின்றனர். தவப் பள்ளிகளில் அறவணவடிகள் பலர், தலைமைநிலை அடைய வேண்டித் தமக்கு வழிகாட்டிய முன்னோர்க்கு மறலியாகிக் கொலை புரிய இல்லையா? அத்தகைய வழக்குகள் இன்றும் வழக்குமன்றங்களில் நடைபெறவில்லையா? எனவே, இஃது எக்காலத்தும், சில மாக்களது இயல்பாக விளங்கும். இதனை எடுத்துக் கூறிய சம்பந்தர் பொய் கூறுகின்றவரும் அல்லர். கூடா ஒழுக்கம் பூண்டு கொடுமை பல புரிந்து புற நிலையளவில் கடுந் துறவு பூண்டார் அனைவரையும் அவர் பழிக்கின்றார். பேய்த்துறவினையும் போலித் துறவினையும் அவர் இழித்து உரைக்கின்றார். சமணர்களும் அவர் செய்த நன்றிக்குக் கடமைப்பட்டுள்ளார்கள். சமணரில்பழியுடையாரைப் பழிப்பது அமணர்கள் கடமையன்றோ? சம்பந்தர் இல்லறத்தில் நின்ற சமணரைப் பழிக்கவில்லை. சம்பந்தர், இடித்துரைத்த பழியுரையால் அன்றோ சமணரிடம் அக்கடுந்துறவு அருகுவதாயிற்று? அதற்கவர்கள் நன்றி பாராட்ட வேண்டாவா? அதனை மறந்து, அப்பெரியார் சமணர் அனைவரையும் பழி தூற்றுகின்றார் என மனம் புழுங்கி அவரை இழுத்துரைப்பதால் என்