பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


பயன்? சம்பந்தர் சைவர்க்கே உரியவர் அல்லர்; சமணருக்கும் உரியர் — உலகனைத்திற்கும் உரியவர். உலகம் முழுவதனையும் ஒரு முதல்வனின் ஒப்பற்ற வடிவமாக‍க் கண்டவர் அவரே அன்றோ?

இவ்வாறு ஒழுகிய சிலர் தம் கொள்கைகளையே எங்கும் பரப்ப வேண்டினர்; பிற கொள்கையினரைக் கண்டால் மனம் எரிந்து புழுங்கினர். அப்பர், சைவரான பிறகு அவர்கள் பகைமை எலாம் சைவர் மேலேயே திரும்பியது. சைவர் காற்றுப் பட்டாலும் அவர்கள் பொறார் ஆயினர்.

நீற்றுமேனி யராயினர் மேலுற்ற காற்று
கொள்ளவு நில்லா அமணர்

எனப் பாடுகின்றார் சம்பந்தர்.

இவர்கள் மன்றாடுவதில் சிறந்தவர்கள். பலரை மன்றாடி வென்றனர் இன்னோர். பெரும் பேச்சாளிகளாய்த் தமது புகழைத் தாமே பறைசாற்றித் திரிந்தவராய் என்றும் இவர்கள் சினந்தே மொழிந்தனராம். செத்தாலும் தமது வழக்கினை இவர்கள் மறப்பதில்லையாம்.

விருது பகரும் வெஞ்சொற் சமணர்
வஞ்சச் சாக்கியர் பொருது பகருமொழி—
பெருக்கப் பிதற்றும் சமணர்—
சாவாயும் வாதுசெய் சாவகர்—

என வருதல் காண்க.