பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67


வழங்கவில்லை போலும்! ஆனால், சுந்தரர் திருப் பாட்டிற்கு உரை வகுத்த பெரியார் ஒருவர். (இராமாநந்த யோகிகள்)

கரியமனச் சமண்காடி யாடு கழுக்களால்,
எரியவச வுணவும் தன்மையே? இமவான்மகள்
பெரியமனந் தடுமாற வேண்டிப் பெம்மான்மதக்
கரியினுரி அல்லதில் லையோ எம்பிரானுக்கே?

என்ற திருப்பாட்டுக் கழுவேற்றிய கதையையே குறிக்கின்றது எனப் பொருள் காண்கின்றார். “கருமனத்தையுடை சமணர் நெய்யாடிய கழு மரங்களில் எரியவும், வைவுண்ணவும், தகுதியோ? உமாதேவி, பெரிய மனம் கலங்க விரும்பிப் பெருமானாகிய எம்பெருமானுக்கு மதயானைத் தோலன்றி வேறொன்றும் இல்லையோ” என்று அவ்வுரையாளர் பொழிப்புரை கூறுகின்றார். (பக். 316) ‘கழுக்களால்’ என்பதற்குக் 'கழுவில்' என்றும், 'எரிய வசவும்' என்பதற்கு 'எரியவும் வசவுண்ணவும்' என்றும் அவர் வலிந்து பொருள் கொள்ள வேண்டி நிற்கின்றது. அதுவும் அன்றி, சமணர்களுக்காக இரங்கிப் புகழ்ந்து, கழுவேற்றியவர்களை இகழ்வதாகவும் அன்றோ இவ்வுரையின் குறிப்புள்ளது? இதற்கு வேறு பொருத்தமான பொருள் இல்லையோ? சுந்தரர்,

"நல்லிசை ஞான சம்பந்தனும் நாவினுக் கரசரும்
பாடிய நற்றமிழ் மாலை,
சொல்லி யேத்து கந்தானை"