பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


எடுத்துக் காட்டுகின்றார். எண்ணாயிரவர் இறந்ததைக் கேள்வியுற்றிருந்தால் அவர் அதனையும் எடுத்துக் காட்டி இருப்பர் அன்றோ?

அப்பெரியார் தமிழகத்தில் தொண்டை நாட்டின் முடிவு வரை வந்து போயினார். மஹாபலிபுரத்தருகேதான் அவர் கப்பலேறித் தம் ஊர்க்குப் போயினார். அத்தொண்டை நாட்டை ஆண்ட நரசிங்கவர்ம பல்லவனைப் பற்றி அவர் கூறுகின்றார்; காஞ்சியின் நிலையை நன்கு விளக்குகின்றார். நரசிங்கவர்மன் புலிகேசனை வென்றான். புலிகேசன் ஹர்சனை வென்றான். அந்த ஹர்சன் பன்னிரண்டாண்டிற்கு ஒருமுறை தன் பொருளை எல்லாம் ஏழைகட்கும், பெருயோருக்கும், கற்றோருக்கும் கொடுத்து விடுவதனை இச்சீனர் குறிக்கின்றார்; அவன் வழிபாட்டினையும் விரித்துரைக்கின்றார். அங்கங்கே அவர் கேட்ட கதையினையும் எழுதி வைக்கின்றார். கழுவேறிய கதை உண்மையாக நடந்திருந்தாலும், அக்கதை அந்நாளில் வழங்கி இருந்தாலும் அவர் காதில் விழுந்திராதா? அவர் இதைப்பற்றிய ஒரு குறிப்பும் எழுதுகின்றார் இல்லை. அக்காலத்தில் எழுந்த வேறு எந்த நூலும் இக்கதையைக் குறிப்பதாக‍க் காணோம். அந்நாளைய சமணர்நூல்களேனும் இதைப்பற்றிக் கூறாவா? இல்லை! எனவே, அந்நாளில் இச்செய்தியும் நடைபெற இல்லை; வரலாறாகவும் வழங்கவில்லை என்பதாயிற்று.

சுந்தர‍ரது திருப்பாட்டிலும் இக்கதை காணக் கிடைக்காமையால், அவர் நாளிலும் இது