பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


"தத்தம் கொள்கையின் உண்மையை ஏட்டிற் பொறித்துத் தீயிலிட்டபோது எவர் ஏடு நெருப்பில் வேவுறாது நின்றதோ அவரே வென்றவர் ஆவர்!" என்றனர். அரசன் அதை மறுப்பதற்கு முன், பிள்ளையார் அதற்கு உடன்பட்டார். ஏவலாளர் தீமூட்டினர்; சம்பந்தர், திருமுறையினைப் போற்றித் திருக்காப்பு நாண் அவிழ்த்தார்; அவிழ்த்த இடத்தில் திறந்து பார்த்தபோது "போகமார்த்த" என்ற நள்ளாற்றுப் பதிகம் வரக் கண்டனர். அதனைத் தனியே எடுத்துத் "தளிரிளவளரொளி' என்ற பதிகம் பாடி இறைவனை வேண்டி, எரியினில் இட்டனர் சம்பந்தர். அஃதும் பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது; அமணர்களோ, அஞ்சி நடுங்கித் தமது மறைமொழி பொறித்த ஏட்டைப் பட்டது படக் கண்டனர்; நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார். இடைநின்றார், பிள்ளையார் இட்ட ஏட்டினை எடுத்தனர். அரசன், சமணர்களைநோக்கி, "நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின்" என்றான். தீயை நீரிட்டு அவித்தனர் ஏவலாளர். திரண்ட சாம்பலைக் கையினால் பிசைந்து தூற்றிப் பார்த்தனர் அமணர். மன்னன் நகைத்து "இன்னும் அரித்துக் காணும்! பொய்யினால் மெய்ம்மை ஆக்கப் புகுந்தநீர் போமின்! இன்னமும் நீர் தோற்கவில்லையோ?" என எள்ளினான்.

முக்கால் வழக்குச் செய்யவேண்டும் என மன்றாடினர் அன்னோர். மன்னவன் மறுக்கவும் பிள்ளையார் உடன்பட்டு "மூன்றாவது வழக்குத்