பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


தான் யாது?" என வினவினார். "அவரவர்கள் உண்மைப் பொருளை ஏட்டிலே எழுதி நீரிடை இட்டால் எவர்களுடைய ஏடு நீரோட்டத்திற்கு எதிர் ஓடுகின்றதோ அவரே வென்றார்" என்றனர் அன்னோர். குலச்சிறையார் "இவ்வழக்கில் தோற்றவர் செய்வது யாது?" என்று அரசனைக் கேட்டார். அவர்கள் அதனைக் கேட்டு, வெகுளியும் பொறாமையும் கொண்டு தங்கள் வாய் சோர்ந்து தாமே. “வழக்கினில் அழிந்தோமாகில் வெங்கழு ஏற்றுவான் இவ்வேந்தன்,” என்று சொல்லினர்.

அனைவரும் வைகை ஆற்றங் கரைக்குப் போயினர். அவர் 'அஸ்தி நாஸ்தி' என்று ஒலையில் எழுதி ஆற்றிலிட, ஆறும் இதனைக்கடலுக்கு அடித்துக் கொண்டு ஓடிற்று. பிள்ளையார் "வாழ்க அந்தணர்" என்ற பதிகம் பாடி ஏட்டில் பொறித்து வைகையிலிட "மருவிய பிறவி யாற்றில் மாதவர் மனஞ் சென்றாற்போல" எதிர்த்து நீர் கிழித்துப் போனது. “வேந்தனும் ஓங்குக” என்று பாடியதன் பயனாகப் பாண்டியன் கூனும் நிமிர்ந்து நின்றசீர் நெடுமாறனாயினான். குலச்சிறையார் குதிரை மேலேறி ஏட்டைத் தொடர்ந்து சென்றார். பிள்ளையார், அவ்வேடு குலச்சிறையாருக்கு அகப்படுமாறு "வன்னியும் மத்தமும்" என்ற ஏடகத் திருப்பதிகம் பாடினார். குலச்சிறையாரும் ஏட்டினை எடுத்துத் தலைமேல் வைத்து வந்து அரசன் முதலானோர்க்குக் காட்டினார். தொண்டர் எல்லாம் "ஹரஹர" என்று முழங்கினர்.