பக்கம்:சரணம் சரணம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சரணம் சரணம்

கேட்பது சிலர் இயல்பு. தாமே கூறுவதிலும் அந்த ஆதரம் இருக்கும்; பிறர் கூறக் கேட்பதிலும் அது இருக்கும் இந்தப் பக்தருக்கு வெற்றுப் புகழ்ச்சியாகிய மற்றவர் புகழ்ச்சியைப் பேசுவதற்கும் விருப்பம் இருப்பதில்லை; பிறர் புகழக் கேட்பதற்கும் விருப்பம் இல்லே.

இவ்வாறு முறுகிய அன்புடையவர்களிடம் வேறு ஒர் அதிசயமான அநுபவம் உண்டாகும். எதைப் பார்த் தாலும் அன்புக்குரிய பொருளாகவே தோன்றும். காத லுணர்ச்சி முறுகில்ை இப்படி ஒரு மெய்ப்பாடுதோன்றும். நோக்குவ எல்லாம் அவையே போறல்’ என்று அதைச் சொல்வார்கள். அதன் பின்பு அன்புடையவர்களின் உரு வெளித்தோற்றம் ஏற்படுமாம். இராவணன் சீதையினிடம் மனத்தைப் பறிகொடுத்ததல்ை அவனுக்குச் சீதையின் வடிவம் தோற்றியதாம். இனம் கண்டு கொள்வதற்காகச் சூர்ப்பனகையை அழைத்து வரச்சொல்லி, ‘இவள்தான நீசொன்ன சீதை?’ என்று கேட்டாம்ை. அவளோ இராம பிரானிடம் காமம் கொண்டவள். அவள் பார்த்தாள், அவளுக்கு இராமபிரானுடைய தோற்றமே தெரிந்தது. வேந்தான் இவகுைம் அவ் வல்வில் இராமன்’ என்றாளாம்.” அவர்கள் மனத்திலுள்ள காமத்துக்கு ஏற்ற படி உருவெளித். தோற்றத்தைக் கண்டார்கள். -

தவறன. காமம் உடையவர்களுக்கே இப்படித் தோற்று மால்ை, உண்மையான காதல் உடையவர்களுக்குத் தோற்றாதா? பிரிந்து சென்ற காதலர் தம் காதலியரிடம் மீண்டும் வரும்போது வழியில் காதலியரின் உருவெளித் தோற்றத்தைக் காண்பதாகத் தமிழ் அகப்பொருள் இலக் கியங்களில் வரும். - *

உண்மையான பக்தர்களுக்கு, அவர்களுடைய பக்தி முறுகிய ஒரு நிலையில், தாம்நோக்கும் இடமெல்லாம் தாம் வழிபடும் தெய்வத்தின் தோற்றம் உண்டாகும். இதை அநுபூதிமான்கள் சொல்லியிருக்கிரு.ர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/118&oldid=680491" இலிருந்து மீள்விக்கப்பட்டது