பக்கம்:சரணம் சரணம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கும் அன்னை 107

நம் மனத்தில் தோன்றுவது அன்பு, அது அம்பிகை யினிடம் வைக்கப்படுமாயின் நம் மனம் அவளேயே நினைக்கும். அதன் பயனுக வாய் அவள் புகழையே பேசும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுபவர்களுக்குத் தான் மனத்தில் ஒருவரைப் பாராட்டுவதும் வாக்கில்ை வேறு ஒருவரைப் புகழ்வதும் ஆகிய இயல்பு இருக்கும். உண்மையான பக்தர்களுக்கு உள்ளம், உரை, செயல் மூன்றும் ஒரே சுருதியில் இயங்கும். ஆகவே எம்பெரு மாட்டியினிடம் அன்பு பூண்ட அபிராமியட்டர் யாரைப் புகழ்வார்? அன்னேயையே புகழ்வார்; வேறு ஒருவருடைய புகழ்ச்சியில் ஈடுபட மாட்டார். வேறு யாரேனும் உலகத்து மனிதர்களேயோ சிறு தெய்வங்களேயோ புகழத் தொடங்கில்ை அதைக் கேட்பதில்கூட அவருக்கு ஆர்வம் இராது; அதை மதிக்க மாட்டார்.

உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்; நின் புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒருபொழுதும்.

எப்போது பேசிலுைம் அம்பிகையின் புகழையே பேசுவது சிறந்த பக்தர்களின் இயல்பு. புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்மணி தன் தோழி களிடம் தன் கணவனைப் பற்றியே பேசுவாள் எப்போதும். வேறு பேச்சு எழுந்தாலும் எப்படியாவது அந்தப்பேச்சைக் கொண்டு வந்து விடுவாள். இது அன்பின் தகைமை. குழந்தையிடம் அளவற்ற வாத்ஸல்யம் வைத்திருப்பவர் களிடமும் இந்த இயல்பைக் காணலாம். அன்னேயிடம் பேரன்பு பூண்ட அபிராமிபட்டர் வேறு எந்தப் புகழை யும் வாய்விட்டுப் பேசுவதும் இல்லை; காது கொடுத்துக் கேட்பதும் இல்லே, பேணுதல் என்பது ஆதரித்தல் என்ற பொருளுடையது. தாம் வம்பு பேசாவிட்டாலும் பிறர் பேசுவதை ஆர்வத்துடன் கேட்கும் இயல்புடையோர் பலர். ஒரு பொருளின் சிறப்பைத் தம்மால் எடுத்துக் கூற முடியாவிட்டாலும் பிறர் கூறும்போது ஆதரவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/117&oldid=680490" இலிருந்து மீள்விக்கப்பட்டது