பக்கம்:சரணம் சரணம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் வல்லபம் I 5

‘அம்பிகையைத் திருமணம் செய்துகொண்டார்; அது பெயரளவில் கல்யாணமன்றி வேறு அன்று என்று அாரேனும் சொல்லவந்தால், அவருக்கு விடை கூறு வாரைப்போல, ஆம் ஐயா! எனக்குத் தெரியும், கல்யா ணம் மட்டுமா நடந்தது? அற்புதமான குழந்தையே பிறந்து விட்டதாக்கும்!’ என்று சொல்கிறர்.

தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்முகனும்

முந்நான்கு இரு மூன்று எனத் தோன்றிய மூதறிவின்

மகனும் உண்டாயது அன்றே?

முருகனே வருணிக்கிறர். சிவபெருமானுக்கு ஐந்து முகம்; அம்பிகைக்கு ஒரு முகம். இருவர் முகங்களும் சேர்ந்து பிறப்பதுபோல அந்தக் குழந்தைக்கு முகங்கள் இரு மூன்று. அப்படியே சிவபெருமானுக்குப் பத்துத் திருக்கரங்கள்; அம்பிகைக்கு இரண்டு. அவையும் ஒன்று பட்டு அமைந்ததுபோலக் குமார நாயகனுக்குப் பன் னிரண்டு கைகள், இப்படி அதிகமான முகங்களும் அதிக மான கைகளும் உடையவனுகப் பிறந்த குழந்தை, வெறும் உடலாற்றல் மட்டும் உள்ளவன? அவன் அறிவிலும் சிறந் கவன். நன்றக முதிர்ந்த ஞான முடையவன். ஞானஸ்கந் தன் என்றும், ஞானபண்டித சாமி என்றும் கூறும் திரு நாமங்களே உடையவன் அல்லவா? அவனுடைய மூதறிவை உலகத்துக்கு எடுத்துக்காட்டத்தானே தகப்பனரே மானுக்கராக இருந்து உபதேசம் பெற்றர்?

அப்படி ஒரு பிள்ளை இந்த மகாயோகிக்குப் பிறந்தது ஆச்சரியம் அல்லவா?

ஆச்சரியந்தான். ஆளுல் இந்த ஆச்சரியத்தை விகள வித்தவள் அம்பிகை. யோகியாக இருந்த பெருமானப் போகியாக்கி விட்டது அன்னையின் வல்லமை. அவர் மலை போல நின்று தவம் செய்தவர்; காமனேயே வென்றவர். அம்பிகையோ மென்மையான கொடி போன்றவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/125&oldid=680499" இலிருந்து மீள்விக்கப்பட்டது