பக்கம்:சரணம் சரணம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகையின் வல்லபம் 1 1 7

(அபிராம வல்லியே, முன் ஒரு காலத்தில் ஆகாசத் தில் உள்ள உலகங்களும் தேவலோகமும் இந்தப் பூவுலக மும் பிரத்தியட்சமாகக் கானும்படியாக, வில்லோடு பொர வந்த மன்மதனுடைய உடம்பை எரித்த தவ முனிவராகிய சிவபெருமானுக்கு, விசாலமான கைகள் பன்னிரண்டு, செம்மையான முகங்கள் மூன்று என்று தோற்றம் அளித்த முதிர்ந்த ஞானத்தையுடைய முருககு ஆகிய பிள்ளேயும் உண்டானது அல்லவா, நீ செய்தவல்லமை?

ககனம்-ஆகாசம்; இங்கே மேல் உலகங்களில் தேவ லோகத்தை யொழிந்த மற்றவற்றைக் குறித்தது. வான்தேவலோகம். புவனம்-பூலோகம். அங்கம்-உடல். தடக்கை முந்நான்கும், முகன் இருமூன்றும் என்று நிரல் நிரையாக வைத்து, உம்மையைப் பிரித்துக் கூட்டிப் பொருள் செய்க. தோன்றிய மகன், மூதறிவின் மகன் எனக் கூட்டுக. மகனும் உண்டாயது என்ற உம்மை, மணந்து கொண்டதன்றி ஒரு பிள்ளேயும் உண்டாகச் செய்தது என விரிந்து, இறந்தது தழி இள எச்சவும்மையா கயிற்று. வல்லி-கொடி போன்றவளே; விளி. உண்டாயது நீ செய்த வல்லபம் அன்றாே? வல்லபம். ஆற்றலுள்ள செயல்.)

அம்பிகையின் செயல் இல்லையேல் சிவபெருமான் எதையும் செய்ய வல்லவர் அல்லர். அப்பெருமாட்டி யோடு இணையாவிட்டால் உலகம் அவர் அருளேப் பெற இயலாது. ஆதலின் இவ்வாறு சொன்ன ர்.

அம்பிகையின் வல்லபத்தால் முருகன் தோன்றின்ை. ஆதலின் அம்பிகைக்கு, குஹஜன்மபூ, குஹாம்பா என்ற திருநாமங்கள் உண்டாயின. - .

இது அபிராமி அந்தாதியில் 65-ஆம் பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/127&oldid=680501" இலிருந்து மீள்விக்கப்பட்டது