பக்கம்:சரணம் சரணம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையும் மலரும் # 19.3.

முடைய சொற்கள் பயனற்றவை என்பதை உணர்ந்து அவர் ஏன் பாடுகிறார்? அவரே இந்தப் பாட்டில் காரணம் சொல்ல வருகிறார்,

அம்பிகையைப் புகழவேண்டும், பாடவேண்டும் என்றால் அது எளிய காரியம் அன்று. அவளை நன்றாகத் தெரிந்து கொள்ளும் ஞானம் வேண்டும். அவளுடைய எழிலேயும் பராக்கிரமத்தையும் அருட்செயல்களேயும் கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேண்டும். அவற்றைத் தெளிவாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் வேண்டும்;. நல்ல வகையில் பொருளும் அழகும் பொருந்த எடுத்துச் சொல்லும் சொல்லாற்றல் வேண்டும்; இனிய கவிகளாகப் பாடும் நாவன்மை வேண்டும். அபிராமியட்டர் இந்த, இயல்புகளே உடையவர். ஆல்ை அவர் தம்மை அப்படிக் கருதவில்லே. தமக்கு எந்த விதமான ஆற்றலும் இல்லே யென்றே சொல்கிரு.ர். பெரியவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதுவே பெருமைக்கு அடையாளம். அரைகுறையானவர்களே தம்மைத் தாமே வியந்து கொள்வார்கள்.

பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னே வியந்து’’ என்று திருவள்ளுவர் சொல்கிறார்,

அபிராமிபட்டர் தம்முடைய தகுதியின்மையைச் சொல்லுகிறர். தாயே! உன்னைப் பாடுவதற்கு எவ்வ. ளவோ வகையான ஆற்றல்கள் வேண்டும்; அவற்றில் ஒன்றையும் நான் பெறவில்லே, என்கிறார், வல்லபம் ஒன்று அறியேன்.

ஆற்றல் ஏதும் இல்லாமல் இந்தக் காரியத்தைச் செய்யத் துணியலாமா? அவர் துணிந்ததற்கு ஏதேனும் ஒரு காரணம் இல்லாமல் போகுமா? ஆற்றல் காரணமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/129&oldid=680503" இலிருந்து மீள்விக்கப்பட்டது