பக்கம்:சரணம் சரணம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 சரணம் சரணம்

களையெல்லாம் நிரப்பிக்கொண்டு அழுக்கு tDLLILD If & இருக்கும் மனத்தை அழகாக வைத்திருக்க வேண்டுமானுல் அன்னேயின் திருவடித் தளிர்களை அங்கே வைக்கவேண்டும். திருவடிப் பல்லவத்தைப் பற்றுவதாவது, இடைவிடாமல் அதை நினைத்துக் கொண்டிருத்தல்.

“ஆற்றல் சிறிதும் இல்லாத சிறியேன் என் உள்ளத்தில் உன் திருவடியையே பற்றாகக்கொண்டேன். அதனுல் பாட சிலானேன்’ என்கிறார் அபிராமிபட்டர், .

அம்பிகை மென்மையானவள். அவள் திருவடியைத் தளிர் என்றால், அவள் தளிரையுடைய கொடி என்று தானே சொல்லவேண்டும்? அம்பிகை பச்சைப் பசுங் கொடி போன்ற மென்மையை உடையவள். அத்தகைய, மெல்லியல் மிகவும் வன்மையுடைய ஒருவரோடு இணைந்து வீற்றிருக்கிருள். அவருடைய தோள் வலிக்குப் பல உதாரணங்களேயா எடுத்துச் சொல்ல வேண்டும்? ஒன்று. சொன்னல் போதாதா? மலேயையே வில்லாக வளைத்த பெருமான் அவர். திரிபுர சங்காரம் செய்யும் பொருட்டுப் புறப்பட்டபோது பொன்மலையாகிய மேருவையே வளைத்து வில்லாக ஏந்திக்கொண்டார். அவ்வளவு வலிமையை யுடைய சிவபெருமாைேடு எப்போதும் வீற்றிருப்பவள் எம் அன்னை: - -

பசும் பொற் பொருப்பு -

வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்! அவர் கையோ மலேயை வளைத்த திண்மையை உடையது: அம்பிகை காலோ மெல்லிய தளிர் போன்றது. மலேயின்மேலே கொடி படர்வதில்லையா? அப்படித்தான் சிவபெருமானும் அம்பிகையும் இருக்கிறார்கள். “சுடரும் கலைமதி துன்றும் - - சடைமுடிக் குன்றில் ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடி?’ என்று அபிராமிபட்டரே முன்பு சொல்லியிருக்கிறர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/132&oldid=680507" இலிருந்து மீள்விக்கப்பட்டது