பக்கம்:சரணம் சரணம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலேயும் மலரும் 121

576ir-T நம் பிடி இறுக்கமாக இராது. எந்தச் சமயத் திலும் ஏதேனும் ஒன்று நழுவி விழுந்து விடும். எதை யேனும் ஒன்றை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டால் நழுவாது.

நாம் இறைவியினிடம் அன்பு கொள் கிருேம். மற்றப் பொருள்களிலும் அன்பு வைக்கிருேம். அதல்ை நம் முடைய அன்பு எதிலும் முழுமையாக இல்லே. எதையும் நன்றாக இறுகப் பற்றிக் கொள்வதில்லே. இந்தப் பக்தரோ வேறு எதையும் பற்றாமல் அம்பிகையின் திருவடி மலர் ஒன்றையே இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார், வேறு எந்தப் பற்றும் இவருக்கு இல்லே.

நின் மலர் அடிச் செம்பல்லவம்

அல்லது பற்று ஒன்று இலேன்.

எம்பெருமாட்டியின் திருவடிப்பல்லவம் கையினுல் பற்றிக்கொள்வது அன்று; மனத்தில்ை பற்றிக்கொள்வது.

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப் பாத மேமனம் பாவித்தேன்?

என்பது சுந்தரர் தேவாரம், மனத்தால் பற்றுவதே பற்று. மனம் பற்பல பொருள்களைப் பற்றிக்கொள்ளும் சக்தி உடையது. அந்தப் பற்றை விட்டால்தான் இன்பம் உண்டாகும். “அற்றது பற்றெனில் உற்றது வீடு.”

அம்பிகையின் திருவடியைத் தளிர் என்றார். அது இளமை மாருதது; பசுமையுடையது; ஈரம் உடையது; குழைந்து விளங்குவது. அன்பர்கள் தம் மனத்தில் அதை வைத்துத் தியானம் செய்தால் மனத்திலுள்ள மாசு நீங்கும்; இன்பம் பெருகும். அலங்காரம் செய்வதற்குத் தளிர்களைப் பயன்படுத்துவார்கள். கண்ட கண்ட குப்பை

9. r. ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/131&oldid=680506" இலிருந்து மீள்விக்கப்பட்டது