பக்கம்:சரணம் சரணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.4 சரணம் சரணம்

மிகப் பெரியவர்களுக்கும் புகலிடமாக இருக்கும் பெரு மாட்டியிடம் இந்த நிலவுலகத்து அடியார்களும் சரனம் என்று அடைக்கலம் புகுகிறர்கள். அவர்கள் எதற்காக அவ்வாறு செய்கிறார்கள்? மக்களுக்கு உண்டாகும் துன்பங் களில் மிகக் கொடியவை இறப்பதும் பிறப்பதும். இந்த இரண்டையும் நம்முடைய முயற்சியினுல் போக்கிக் கொள்ளல் முடியாது. எத்தனே வலிமையுடையவர்களான லும் இந்த இரண்டுக்குள்ளும் அகப்பட்டுத் துன்புறுகிற வர்களே. அறிவோ, பணமோ, பலமோ எதுவும் அந்தத் துன்பங்களைப் போக்கமுடியாது, பிறப்பிலுைம் இறப்பிகு லும், இடைப்பட்ட முதுமை முதலியவற்றாலும் அலேக்கப் படும் மக்களுக்கு அவற்றைப் போக்கிப் பேரின்பமாகிய அமைதி பெற்ற வாழ்வை அருளுகிறவள் அன்னே. ஜன்ம மிருத்யு ஜராதப்த ஜன விக்ராந்தி தாயினி” (லலிதா. 851) என்ற திருநாமம் இதனைத் தெளிவாகத் தெரிவிக்கிறது.

ஆகவே, அம்பிகையின் திருவடியில் சரணம் புகும் அடியார்கள் இப்போது உலகத்தில் பிறந்து வாழ்ந்தாலும் இனிமேல் இந்த உலக சம்பந்தமே அவர்களுக்கு உண்டா காது, உலகத்தில் பிறப்பதும் பின்பு இறப்பதுமாகிய இந்த ஓயாத சுழற்சியில் சிக்கித் தடுமாறும் பிற உயிர்களைப் போலத் துன்புருமல் முத்தியின்பத்தை அடைவார்கள்.

நாயகி தன் அடியார் மரணம் பிறவி.இரண்டும் எய்தார் இந்த வையகத்தே

உயிர்கள் பெறும் பேறுகளுக்குள் உயர்ந்தது முத்தி. அதைத் தருபவர் மிக உயர்ந்தவர். எல்லாருக்கும் மேலான பராம்பிகையே அந்த வாழ்வைத் தர முடியும். இறப்பும் பிறப்பும் நீங்கி நிற்கும் வாழ்வே முத்தியாதலின், அடியார்கள் அவ்விரண்டையும் இவ்வுலகத்தில் அடைய மாட்டார்கள் என்று கூறினும், அவர்கள் என்றும் பொன் :ருத முத்தியை அடைவார்கள் என்பதே கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/14&oldid=680515" இலிருந்து மீள்விக்கப்பட்டது