பக்கம்:சரணம் சரணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணம் சரணம் $:

அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர்தங்கள் - முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும்.

மூன்று அசுரர்களுடைய வலிமையும் அழிந்துபடும்படிஅவன் கோபித்தான். - . . -

சிவாராத்யா (406) என்று லலிதா சகசிரநாமம் சொல்கிறது. சிவபெருமால்ை வழிபடப்பெறுபவள். அம்பிகை,

மகாதேவனே இறைவியைச் சரண் புகும்போது மற்ற: வர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? திருமாலும் சரணம் புகுகிருன். அவர்களுக்கெல்லாம் வேண்டியவற். றைத் தரும் பெருமாட்டியாக அபிராமியம்மை எழுந்: தருளியிருக்கிருள்; நிலேயாக இருக்கிருள்.

பெம்மானும் முகுந்தனுமே சரணம் சரணம் என நின்ற நாயகி.

தேவர்கள் தங்களுக்கு ஏதேனும் குறை உண்டாயின்’ வணங்கிச் சரணம் என்று அடைக்கலம் புகுந்தால், அவர் களுடைய துன்பத்தைப் போக்கி அருள் புரிபவர்கள் திரிபுராந்தகனும் முகுந்தனும். அத்தகையவர்களே எம். பெருமாட்டியின் திருவடியில் சரணம் என்று தஞ். சம் புகுகிரு.ர்களாம்.

தங்கள் தங்களுக்குரிய கடமைகளை ஆற்றுவதற்குரிய வலிமையைப் பெறுவதற்காகவே இவ்வாறு பெரிய தலை வர்களாக இருக்கும் தேவர்கள் அம்பிகையை வழிபடுகிறர் கள்;ஹரிப்ரம்ஹேந்திர ஸேவிதா (297)என்பது லலிதாம்: பிகையின் திருநாமங்களில் ஒன்று. - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/13&oldid=680504" இலிருந்து மீள்விக்கப்பட்டது