பக்கம்:சரணம் சரணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சரணம் சரணம்:

என்ற இரக்கம் சிறிதும் அவர்களுடைய உள்ளத்தில் இல்லை. அரக்கர், அசுரர் ஆகியவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள், இரக்கம் என்றாெருபொருள் இலாத நெஞ்சினர் அ க் க ர்?’ என்று கம்பர் பாடுவார். இரக்கத்தையே அருள் என்றுகூறுவர். மற்ற உயிர்களிடம் இரக்கம் காட்டுவது உயர்ந்த பண்பு. எல்லா உயிர்களிடத்திலும் அருளுடையவராக நடந்துகொள்பவர்கள் இந்த உலகத். தில் வாழும் தேவர்களேப் போன்றவர்கள். அருள் என்பது: தெய்விகமான பண்பு. அதற்கு மாருகப் பிறருக்குத் துன், பம் செய்யும் உள்ளமுடையவர்கள் அரக்கருக்கும் அசுர ருக்கும் ஒப்பானவர்கள். விலங்கு கூடத் தனக்குத் தீங்கு. வரும் என்ற பயத்தினலோ உணவின் பொருட்டோ பிற உயிரைக் கொல்லும். அப்படியின்றி எந்தக் காரணமும் இல்லாமல் பிறரை நலிந்து அதல்ை மகிழ்ச்சி அடைகின்ற, உள்ளம் விலங்கின் உள்ளத்தை விடக் கொடியது; அது. தான் இராட்சச உள் ளம்; அசுர உள்ளம்.

திரிபுரங்களேயே தங்களுக்கு உரிய நிலையான் செல்வம் என்று எண்ணிக்கொண்டு வாழ்ந்தவர்கள் அவற்ற்ை. உடையவர்களாகிய அசுரர்கள். தம்முடைய செயலால் பல உயிர்கள் அழிகின்றனவே என்ற அருள் சிறிதும் இல் லாதவர்கள். நாமும் அவர்களைப் போலத்தான் இருக்கி ருேம். இந்த உடம்பே சதமென்று எண்ணி வாழ்கிருேம். பிறருக்குத் துன்பம் தருகிருேம்.ஜீவகாருண்யம் இல்லாமல் இருக்கிருேம்,

முப்புரங்களின் தலவர்களாகிய அசுரர்களைச் சிவபெரு மான் அடக்கின்ை. அவர்களுடைய வலிமையை அழித் தான். அவர்களே அழிக்கவில்லை. அவர்களுடைய அகத் தைக்கும் கொடுமைக்கும் பக்க பலமாக இருந்த திரிபுரங் களே மட்டும் சிரித்து எரித்தான். அதல்ை திரிபுராந்தகன் என்ற பெயர் அப்பெருமானுக்கு அமைந்தது. அவன் அம்பிகையைச் சரணம் புகும் அடியார்களில் ஒருவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/12&oldid=680493" இலிருந்து மீள்விக்கப்பட்டது