பக்கம்:சரணம் சரணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I32 சரணம் சரணம்

பெற்றவர்கள். அவருக்குப்பின் அவருடைய பிள்ளேயாகிய இவர் அந்தச் சொத்துக்கு உரியவரானர். ஏதோ வியா பாரம் செய்தார். எதிர் பாராத நஷ்டம் வந்துவிட்டது. ஏழையாகி விட்டார். இவரால் என்ன தானம் செய்ய முடியும் அந்தக் குடும்பத்தில் வளர்ந்து வந்த கொடைத் தன்மை, வண்மை குன்றிவிட்டது ஏன்? ... •

இன்னும் ஒருவர் நல்ல குலத்திலே பிறந்தவர். ஆல்ை எப்படியோ பொல்லாதவர்களுடன் கூடி ஒழுக்கம் கெட் டுப் போர்ை. அவர் குலத்தில் குறைவுடையவரானர் ஏன்?

பிறப்பிலே ஏழைகளாகப் பலர் இருக்கிரு.ர்கள். ஒழுக்கம் இல்லாத சூழ்நிலையில் பிறக்கிறார்கள் பலர். நல்ல குலம் கோத்திரத்தில் பிறக்கும் வாய்ப்புப் பலருக்கு இருப் பதில்லை.

ஒருவனுடைய சகோதரன் படித்துப் பெரிய பரீட்சை களில் எல்லாம் தேர்ச்சி பெற்றுப் புகழ் பெறுகிருன். ஆல்ை இவனுக்குப் படிப்பே வருகிறதில்லை. அவன் கலெக்டர் வேலைக்குப் போனல், இவனுக்குப் பில் கலெக்டர் வேலேகூடக் கிடைப்பதில்லே, ஏன்? இப்படியே குணம் குன்றி அலேகிறார்கள் பல பேர். ஏன்? எல்லாவற். றிற்கும் உரிய காரணம் ஒன்று தான். முன்பிறவியில் இவர் கள் புண்ணியம் செய்யவிவ்லே. எல்லாப் புண்ணியச் செயல்களுக்கும் மேலான புண்ணியச் செயலாகிய பக்தி புரியவில்லை; அன்னேயிடம் அன்பு வைத்துப் பக்தராக வாழவில்லை.

அப்படி வாழ்வதற்குச் சிறப்பாக ஏதாவது வேண்டுமா? மலைமேல் ஏறவேண்டுமானல் உடம்பில் பலம் வேண்டும். விலே உயர்ந்த பொருளே வாங்க வேண்டுமானல் பணம் வேண்டும். சாஸ்திரங்களேப் படித்து அறிய வேண்டுமானல் கல்வி வேண்டும். அம்பிகையை வணங்குவதற்கு என்ன வேண்டும்? பலம் இல்லாதவனும் பணம் இல்லாதவனும் கல்வி இல்லாதவனுங்கூடப் பக்தி பண்ணலாம். பணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/142&oldid=680518" இலிருந்து மீள்விக்கப்பட்டது