பக்கம்:சரணம் சரணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் விண்வும் 13 I

மாமரத்தில் காய் இருக்கிறது. அது பச்சையாக இருக் கிறது. கடினமாகவும் இருக்கிறது. கடித்தால் புளிப்பாக இருக்கிறது. அதைப் பறித்தால் பிறந்த இடைத்தை விட்டு வரும்போது துயரக்கண்ணிர் வடிப்பதுபோலப் பால் வடி

கிறது.

அந்த மாங்காய் பழுத்து விடுகிறது. அப்போது அதிசயமான மாற்றங்கள் நிகழ்கின்றன. அதன் பச்சை நிறம் மாறிப் பொன் நிறம் உண்டாகி விடுகிறது. அதன் கடினமான தன்மை மாறி நெகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் புளிப்புச் சுவை மாறி இனிப்பு உண்டாகிறது. இவை மட்டுமா? முதிர்ந்தவுடன் பற்றற்றவரைப்போல இது காறும் இருந்த மரத்தை விட்டு உதிர்ந்துவிடுகிறது. அதற்குக் கனிவு என்ற பக்குவம் வந்ததல்ை உண்டான மாற்றங்கள் இவை.

இவ்வண்ணமே ஒருவனிடம் பக்தி உணர்ச்சியும் அத ல்ை கனிவும் உண்டாகிவிட்டால் அவனுடைய எண்ணங் களிலே தூய்மை, பேச்சிலே இனிமை, செயல்களிலே பிறர் நலம் காணும் தகைமை இவை உண்டாகிவிடும். அவன் செய்வன எல்லாம் நல்லவகையாக அமையும். அவனால் பலருக்கு நன்மை உண்டாகும். அவனேக் கண்டு பலர் திருந்துவார்கள். -

அவன் இவ்வாறு செய்யும் நல்ல செயல்கள் அவனுக்கு அடுத்த பிறவியில் நல்ல பயனைத் தரும். அவன் வாழ்வு, நிரம்பிய வாழ்வாக அமையும்.

இப்போது நன்றாக வாழ்கிறவர்கள் அவ்வாறு இறை வனே ஏத்தி வழிபட்டவர்கள். அல்லாதவர்கள் முன் பிறவி களில் பக்தி பண்ணுதவர்கள். இந்தக் கருத்தை அபிராமி பட்டர் சொல்லுகிறார்.

இதோ ஒரு மனிதர். இவருடைய தந்தையார் நல்ல பணக்காரர்; அறம்பல புரிந்தவர். பலர் அவரால் வாழ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/141&oldid=680517" இலிருந்து மீள்விக்கப்பட்டது