பக்கம்:சரணம் சரணம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G சரணம் சரணம்

அமையும். மனத்தில் தூய்மை இல்லாவிட்டால் நம் சொல்லிலும் செயலிலும் தீயவையே விளையும். மனம் துய்மையாக வேண்டுமானல் நல்ல எண்ணங்களேயே எண்ணவேண்டும்; உண்மையான பொருளையே சிந்திக்க வேண்டும்,

‘அகந்தூய்மை

வாய்மையால் காணப்படும்?? என்பது திருக்குறள். உள்ளத்தூய்மையைச் சத்தியம் காட்டும்; வாய்மை காட்டும். உண்மையைப் பேசுபவன் உண்மையை உணரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலான உண்மை இறைவன். அவன்தான் மெய்யான பொருள், அவனிடம் ஈடுபாடு உண்டானல் பொய்யான பொருளில் மோகமும், அதல்ை உண்டாகும் தன்னலமும், அதல்ை விளையும் தீய செயல்களும் குறையும், இறைவனிடம் உண்மையான அன்புடையவன் எப்போதும் சத்தியத் தையே விரும்புபவனக இருப்பான்; எல்லா உயிர்களிடத் திலும் அன்பு கொள்வான்; நல்லகுணங்களுக்கு உறைவிட ” இருப்பான். - - - .

‘இராவணன் சிவபக்தன் அல்லவா? அவன் பொல்லா தவகை இருந்தானே! என்ற கேள்வி எழல்ாம். -

இராவணன் உண்மையான பக்தன் அல்ல. பிறரை அடக்கி ஆள்வதற்கு அந்தப் பக்தியைப் பயன்படுத்திக் கொண்டான், அவன் பெற்ற படைகள் அந்தப் பக்தியால் கிடைத்தன. அவற்றைக் கொண்டு பிறருக்குத் தீங்கு செய்தான். அவன் செய்த தவம், கொலையாளி கையில் கத்திபோல் உதவியது. •

உண்மையாக இறைவனிடம் அன்புடையவன், அந்த அன்பு ஏற ஏற மெல்ல மெல்லப் பக்குவம் அடைந்து கனிந்து விடுவான். பக்திக்கு அடையாளம் கனிவு, உள்ளத் .தில் கனிவுடையவன் யாருக்கும் தீங்கு நினைக்கமாட் உான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சரணம்_சரணம்.pdf/140&oldid=680516" இலிருந்து மீள்விக்கப்பட்டது